புண்ணியராஜன் சாவக நாட்டில் ஆட்சி
செலுத்திக் கொண்டிருந்தபோதுதான் சோழநாட்டில் பூம்புகார் நகரில்
கோவலனுக்கும் மாதவிக்கும் மகளாக மணிமேகலை பிறந்து வளர்ந்து வந்தாள். தன்
தந்தை கோவலன் மதுரையில் பாண்டிய அரசனால் கொலையுண்ட செய்தி கேட்டு அவள்
வருந்திக் கொண்டே இருந்ததை மாற்ற நினைத்த அவளுடைய தாய் மாதவி, ஒரு நாள்
அவளை ஒரு மாறுதலுக்காக வெளியே அனுப்ப நினைத்தாள். “நீ தொடுக்கும் பூமாலை
உன் கண்ணீரால் நனைந்து பூசைக்கு ஆகாததாயிற்று. ஆகவே நீ சோலை சென்று
புதுமலர் பறித்துக் கொண்டுவா” என்று அவளை அனுப்பினாள். மணிமேகலை, தன் தோழி
சுதமதியோடு பூப்பறிப்பதற்காக உபவனம் என்ற சோலைக்குச் சென்றாள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment