Monday, 24 October 2016

அங்கத எழுத்தாளர் சித்திரபுத்திரன் – இறுதிப் பகுதி


(III) சித்திரபுத்திரன் விவாதங்கள் – மதங்கள் பற்றிய விளக்கம்:
siragu-angadha-writer31. சிக்கலான பிரச்சினை: ஒரு ஆத்திகனுக்கும் பகுத்தறிவாதிக்கும் இடையே  சமயங்களையும் கடவுளரையும் குறித்த ஓர் உரையாடல் நடைபெறுகிறது.   மதங்கள் மனிதனால் உண்டாக்கப்பட்டவை. இருப்பது ஒரே கடவுள் என்று சொன்னால் இத்தனை விதமான மதங்களையும், கடவுளரையும் ஒரு  கடவுளே படைக்க வேண்டிய காரணம் என்ன? என்ற பகுத்தறிவுவாதியின் கேள்வியினால் குழப்பமடைகிறார் ஆத்திகன். கடவுளின் மகன் என்று சொல்வதற்கு, கடவுளின் தூதன் என்று சொல்வதற்கெல்லாம் என்ன ஆதாரம்?, வேத நூல்கள் சொன்னால் அதற்கு என்ன ஆதாரம்?, கடவுள் வேத நூல்களைப் படைத்தார் என்பதற்கு என்ன ஆதாரம்?, யாரோ சொன்னார்கள் என்று சொல்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளலாமா?, அப்படியானால் நான் ஒரு கடவுள் என்று சொன்னால் நீ ஏற்றுக் கொள்வாயா? என்று கேள்விமேல் கேள்வி கேட்டுத் துளைத்தெடுக்கிறார் பகுத்தறிவுவாதி. பகுத்தறிவாளர் இது போல இந்து, புத்த, கிறித்துவ, முகம்மதிய, பொதுவாக என ஒவ்வொரு மதக் கோட்பாட்டையும் குறித்து பற்பலக் கேள்விகள் கேட்கும்பொழுது; பதில் சொல்லத் தெரியாதபொழுதெல்லாம், “இது ஒரு சிக்கலான பிரச்சினை, பெரியவர்களை கலந்தாலோசித்து பதில் சொல்கிறேன்” என்று பதில் சொல்லாமல் ஆத்திகன் நழுவுவது படிப்பவருக்கு புன்முறுவலை வரவழைக்கும் விதம் அமைந்திருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment