‘‘தோழர்களே! எனக்கோ வயது 82 ஆகிறது. நான்
எந்த நேரத்திலும் இறந்துவிடலாம். ஆயினும், நீங்கள் இருப்பீர்கள். உங்களைவிட
முதிர்ந்த நான், மரண வாக்குமூலம் போன்று ஒன்றைக் கூறுகிறேன். மரண
வாக்குமூலம் கூறவேண்டிய நிலையில் உள்ளவன் பொய் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இன்றைய காமராசர் ஆட்சியில் நமது நாடு அடைந்து வரும் முன்னேற்றம்
இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளில் என்றுமே நடந்ததில்லை. நமது மூவேந்தர்கள்
ஆட்சிக் காலத்திலாகட்டும், அடுத்து நாயக்கர் மன்னர்கள், மராட்டிய
மன்னர்கள், முசுலிம்கள், வெள்ளைக்காரர்கள் இவர்கள் ஆட்சியில் ஆகட்டும்,
எல்லாம் நமது கல்விக்கு வகைசெய்யவில்லை.
தோழர்களே! நீங்கள் என் சொல்லை நம்புங்கள்.
இந்த நாடு உருப்பட வேண்டுமானால் இன்னும் 10 ஆண்டுகளுக்காவது காமராசரை
விட்டுவிடாமல் பிடித்துக்கொள்ளுங்கள். அவரது ஆட்சிமூலம் சுகமடையுங்கள்.
காமராசரைப் பயன்படுத்திக் கொள்ள நாம் தவறிவிட்டால், தமிழர்களுக்கு
வாழ்வளிக்க வேறு ஆளே சிக்காது.”
(1961, தேவகோட்டையில் நடந்த பொதுக்கூட்டத்தில் தந்தை பெரியார்.)
ஜூலை 15 காமராசர் பிறந்த நாள். காமராசரை
நன்றியோடு நினைத்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றோம். ராஜாஜி
குலக்கல்வித் திட்டத்தை 1953 ஆம் ஆண்டு கொண்டு வரும் போது அதனை ஒழித்தே தீர
வேண்டும் என்று முடிவெடுத்தடுத்த பெரியார், காமராஜர் அவர்களை
ஆட்சிக்கட்டிலில் ஏற்றி ராஜாஜி மூடிய 6000 பள்ளிக்கூடங்களை மீண்டும் திறக்க
வைத்து, குலக்கல்வி திட்டத்தால் நம் மாணவர்கள் கல்வி உரிமை பறிபோகாது
தடுத்தார். எனவே தான் தந்தை பெரியார் அவர்கள் காமராசர் மீது தனி அன்பு
கொண்டிருந்தார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.