அருணகிரிநாதர் முருகப்பெருமானின்
அலங்காரக் கோல அழகினை வியக்கும் நிலையில் பாடிய நூல் கந்தர் அலங்காரம்
ஆகும். இவ்வலங்காரப் பாடல்கள் முருகப்பெருமானுக்கு மிகவும் பிடித்த
பாடல்கள்என்று புகழப்பெறுகின்றன. பாதாதிகேசமாக முருகப்பெருமானின் அழகு
இந்நூலில் அலங்காரமாகக் காட்டப்பெறுகிறது. மேலும் கந்தனின் ஊர்தி, படை,
கொடி போன்றனவும் புகழப்பெறுகின்றன. இந்நூல் கந்தனின் அலங்காரத்தை மட்டும்
சொல்லாமல் அவனை நம்பினால் உயிர் முக்தி நிலை பெறும்என்ற கருத்தை உறுதிபட
மொழிகின்றது. இந்நூலில் முருகன் தனக்கு உரைத்த உபதேச மொழிகளையும், உலகம்
உய்ய தான் அருளும் உபதேச மொழிகளையும் இணைத்துப் பாடுகின்றார்
அருணகிரிநாதர்.
முருகப்பெருமான்
அருணகிரிநாதப்பெருமானுக்கு “ஒளியில் விளைந்த உயர் ஞான பூதரத்து
உச்சியின்மேல் அளியில் விளைந்த ஓர் ஆனந்தத் தேன்” (8) போன்ற அரிய உபதேசத்தை
அருளினார் என்று கூறப்படுகிறது. அவ்வுபதேசப் பொருள் வானன்று, காலன்று,
தீயன்று, நீரன்று, மண்ணுமன்று, தானன்று, அசரீரி அன்று, சரீரி அன்று. (9).
ஐம்பூத எல்லை கடந்து, உருவமுடையதாகவும் உருவம் அற்றதாகவும் இல்லாமல்
தனிப்பெருவெளியாக முருகப்பெருமான் அருணகிரிநாதருக்குக் காட்சி தந்துள்ளார்
என்று கூறப்படுகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment