தமிழ்ப்புலவர் ஔவையாரை அறியாத தமிழரே
இருக்க முடியாது. அப்படி யாராவது இருந்தால் அவர்கள் பள்ளி செல்லும் வயது
வராத சின்னஞ்சிறு மழலையர் பட்டாளம் மட்டுமே. அகரமுதல என அ, ஆ, இ என்ற
எழுத்து வரிசையைப் படிக்கத் தொடங்கும் வயதில் ‘ஔ’ என்ற எழுத்துக்கு
எடுத்துக்காட்டாக அனைவரும் படித்து வருவது ஒரு மூதாட்டியாகக் காட்டப்படும்
ஔவையாரையே. அதற்கு மேல் அவரைப் பற்றி ஒன்றும் தெரியாமல் இருந்த அந்த வயது
முதற்கொண்டும் பின்னர், ‘ஆத்திச்சூடி’ என்ற நீதி நூல் கூறும் “அறம் செய
விரும்பு” “ஆறுவது சினம்” “இயல்வது கரவேல்” என்று அவர் பாடல்களைப் படிக்கத்
தொடங்கி விடுவோம். ஆக, ஔவையாரின் பாடல்கள் தெரியாத தமிழரே கிடையாது
என்றும் உறுதியாகச் சொல்லலாம்.
பொதுவாகப் பலரும் அவரைப் பற்றி கொண்டிருக்கும் கருத்து:
“ஔவையார் தமிழ் நாட்டில் வாழ்ந்த பெண்
புலவர். வள்ளல் அதியமான் அளித்த நெல்லிக்கனியை ஔவையார் உண்டு நீண்ட காலம்
வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகின்றது” (ஔவையார்:
https://ta.wikisource.org/s/34) என்பதையே ஒட்டியிருக்கும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment