தமிழில்
புதுக்கவிதையின் காலத்தை மூன்று பிரிவுகளில் வகைசெய்யலாம். பரிசோதனைக்
காலம்(1934-1947), மறுமலர்ச்சிக் காலம் (1959-1969), செல்வாக்கு காலம்
(1970க்கு மேல்). என்று புதுக்கவிதையின் வளர்ச்சியை அப்துல் ரகுமான்
இவ்வாறு குறிப்பிடுக் காட்டுகிறார். இது மறுமலர்ச்சிக் கால கவிஞர்களின்
செயற்பாட்டைஅறிந்து கொள்ள உதவுகிறது.
தமிழுக்குப் புதுக்கவிதையை அறிமுகம்
செய்து பரிசோதித்தது என்பது மணிக்கொடிக் காலம் என்றாலும், அதன்
வளர்ச்சிக்கும் அதனுடைய சமூக அங்கீராத்தை உறுதி செய்து கொள்வதற்கும்,
மறுமலர்ச்சி காலம் மிகத் தீவிரமாக பணியாற்றியது. எனினும்,
மறுமலர்ச்சிக்குப் பின் சிலகாலம் அதாவது எழுத்து காலத்திற்கு பின் தொய்வு
ஏற்பட்டது என்பதை மறுக்க முடியாது.
மறுமலர்ச்சிக் காலகட்டத்தில் தோன்றிய
கவிஞர்கள் பலரும் பலவித வகைகளில் கவிதைகளை மேற்கொண்டு வெற்றி கண்டனர்.
அவர்களுள் குறிப்பிடத்தக்கவர் சி.மணி. எழுத்து இதழில் ந.பி-யின் கவிதையை
விமர்சித்த சி.சு.செ அதற்கு பின் பலருடைய கவிதைகளை அவ்வளவாக
பொருட்படுத்தவில்லை. ந.பி-க்கு பின் அவர் கொண்டாடியது சி.மணியின்
கவிதைகளைத்தான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment