பிருத்திகா சைதாப்பேட்டையில் பேருந்து 5 A
வுக்காக காத்திருந்தாள். அவள் கிழக்கு தாம்பரம் செல்ல வேண்டும். தி
நகரிலிருந்து அந்த பேருந்து வந்து விட்டது. அப்போது பகல் இரண்டு மணி
இருக்கும் என்பதால் பேருந்துவில் அதிகக் கூட்டமில்லை. ஆனாலும்
பிருத்திகாவுக்கு நிற்க இடமில்லை. அவள் பெண்கள் பக்கம் நின்றிருந்தாள்.
அவளுக்குப் பக்கத்தில் இருந்த இருக்கையில் ஒரு நடுத்தர வயது பெண்ணும்
அவளுடைய ஆறு வயது பெண்ணும் அமர்ந்திருந்தனர். பிருத்திகாவை அந்தப் பெண்
வினோதமாகப் பார்த்தாள். தன் அம்மாவிடம்” யாருமா இவங்க?” என்றாள். அதற்கு
அந்தப் பெண்மணி,“அவ அலி. அதாவது ஆணுமல்ல, பெண்ணுமல்ல.” என்றாள். இதைக்
கேட்டதும் பிருத்திகாவுக்கு தூக்கி வாரிப் போட்டது. எங்களுக்கு இயற்கையாய்
பெண் உணர்வு ஏற்படுவதால் நாங்கள் திருமங்கையாக மாறுகிறோம். அழகாக
’திருமங்கை’ என்று சொல்வதை விட்டுவிட்டு ’அலி’ என்று சொல்கிறாளே. படித்த
முட்டாள் என்று எண்ணினாள்.
அதற்குள் இறங்க வேண்டிய இடம்
வந்துவிட்டதால் ஒரு பெண்மணி எழுந்துவிடவே ஒரு வயதான அம்மாள்
பிருத்திகாவுக்குத் தன் பக்கத்தில் உட்கார இடம் கொடுத்தாள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment