ஆனால் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களே இட
ஒதுக்கீட்டிற்கு எதிராகப் பேசுவது வேதனையையும், எதிர்காலத்தைக் குறித்த
அச்சத்தையும் தருகிறது. நம் மக்களில் சிலர் “இன்னும் எவ்வளவு காலத்திற்குத்
தான் இட ஒதுக்கீட்டைப் பற்றியே பேசிக் கொண்டு இருப்பீர்கள்?” என்று
சலிப்புடன் கேட்கிறார்கள். இட ஒதுக்கீட்டுத் திட்டம் நாடு முழுவதும்
செயல்படுத்தப்படவே இல்லை என்று இவர்களுக்குத் தெரியாமலேயே வைத்து இருப்பது
பார்ப்பன ஆதிக்கத்தின் விளைவு தான். இட ஒதுக்கீடு முறையில் 5% கூட
நிரப்பப்படவில்லை என்று தாழ்த்தப்பட்டோர் ஆணையம் ஒவ்வொரு ஆண்டும்
மீள்பார்வையின் (review) போது கதறிக் கதறிப் பதிவு செய்வதை நரேந்திர மோடி
மட்டும் அல்ல; இதற்கு முன் இருந்த ஆட்சியாளர்களும் கண்டு கொள்வதும் இல்லை
/ கண்டு கொண்டதும் இல்லை. இப்படி இட ஒதுக்கீடு முறையை செயல்படுத்தாமலேயே
இருந்து விட்டு, அது செயல்படுத்தப்பட்டு விட்டது என்ற அனுமானத்தில்
“இன்னும் எவ்வளவு காலத்திற்குத் தான் இந்த இட ஒதுக்கீடு” என்று கேட்பவர்கள்
இருப்பது மிகவும் வேதனையான செய்தி.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment