பண்டைய தமிழக மக்களின் போக்குவரத்துத்
தேவைகளை நிறைவேற்ற அவை வணிகம், போர், வழிபாடு, உறவின் நிமித்தம் என எதுவாக
இருப்பினும் அவை எளிதாக நடை பெற பல வகை சாலைகள் தமிழகத்தின் ஊர்களிலும்,
சிற்றூர்களுக்கு இடையிலும், பெருநகரங்களுக்கு இடையிலும் இருந்தன.
ஊர்களுக்குள் இருக்கும் பெரிய வீதிகள் ‘பெருந்தெருக்கள்’ என
அறியப்பட்டன(1). அக்காலத்தில் தேரோடும் வீதிகளான பெருந்தெருக்களைக் கொண்டவை
பல ஊர்கள். இரு சிற்றூர்களை ஊர்களை இணைக்கும் சாலைகள் ‘வதிகள்’ என
அறியப்பட்டன(2). ‘பெருவழிகள்’ என அறியப்பட்ட தடங்கள் பேரசுகளின்
தலைநகரங்களையும், துறைமுகங்களையும், வணிக நகரங்களையும், பெருநகரங்களையும்
இணைத்தன(3).
இத்தகைய பெருவழிகள் இன்றைய தேசிய
நெடுஞ்சாலைகளுக்கு இணையானவை. இன்று போலவே இந்த பெருவழிகளைப் பராமரிக்க வரி
வசூலிக்கப்பட்டு பெருவழிகள் பராமரிக்கப்பட்டன. அரசின் தடிவழி வாரியம் என்ற
அமைப்பு மூலம் பராமரிப்பு வரிகள் வசூலிக்கப்பட்டன(4). வணிகர்களும், சரக்கு
வண்டிகளும், சாத்துக் கூட்டத்தினரும், வழிப்போக்கர்களும், பொதுமக்களும்
பயன்படுத்திய இத்தகைய பெருவழிகள் தமிழகத்தின் ஆற்றங்கரைகளை ஒட்டியே
அமைந்தன. வழிப்போக்கர்களின் நீர்த்தேவைகளுக்கும் அவை உதவின. ஆற்றங்கரையோரம்
மக்கள் குடியேறிய ஊர்களையும் அவை இணைத்ததால் பெருவழிகள் உருவானதைத்
தேவைக்கேற்ற உருவாக்கம் என்றே கொள்ளலாம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment