Monday 4 November 2019

ஆரேகாடு (Aarey forest)


siragu aarey forest4
ஆரேகாடு என்பது மும்பை மாநகரில் உள்ள ஒரு பெரும் திறந்த வெளிப்பகுதி. இது மும்பை நகரின் நுரையீரல் போல் அமைந்து மக்கள் சுவாசிக்க காற்றை அளிக்கிறது. மும்பை பெரு நகர இருப்புப் பாதைக்கழகம் (MMRCL – Mumbai Metro Rail Corporation Limited) இப்பகுதியில் தன் தொடர் வண்டிப் பெட்டிகளை நிறுத்திவைக்கத் (to park trains) திட்டமிட்டது. இதை செயல்படுத்துவதற்காக அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்கு மும்பை மாநகராட்சி முனைந்தது. இதை எதிர்த்து சில தொண்டு நிறுவனங்கள் பம்பாய் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
உடனே மாநகராட்சியினர் தொண்டு நிறுவனங்களின் எதிர்ப்பை முறியடிக்க “நாங்கள் மரங்களை வெட்டவில்லை, அவற்றை வேரோடு பெயர்த்து எடுத்து வேறு இடங்களில் நடப்போகிறோம்” என்று கூறி, சுமார் 1800 மரங்களைப் பிடுங்கி விட்டனர். அவற்றில் சுமார் 800 மரங்கள் வேறு இடங்களுக்குக் கொண்டு போகும் முன்பே செத்துவிட்டன.
இதைக் கண்ட தொண்டு நிறுவனங்கள் மரங்களை வேருடன் பெயர்த்து எடுப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தன.

இந்நிலையில் 4.10.2019  வெள்ளிக்கிழமை அன்று பம்பாய் உயர்நீதிமன்றம் ஆரே பகுதி ஒரு காடு என்று “சட்டப்படி” அறிவிக்கப்படவில்லை என்றும், ஆகவே அங்கு உள்ள மரங்களை வெட்டுவதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் தீர்ப்பு அளித்தது. இத்தீர்ப்பு வெளிவந்து ஒரு நாள் கழித்து, அதாவது 6.10.2019 ஞாயிறு அன்று மாநகராட்சியினர் முழுவீச்சில் மரங்களை வெட்டத் தொடங்கினர். மும்பை மாநகராட்சியின் இச்செயலுக்கு உள்ளூரில் இருந்து மட்டும் அல்லாமல் உலகெங்கிலும் உள்ள தொண்டு நிறுவனங்களிடம் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment