அறிவியல் பயன்பாடும், பகுத்தறிவுச்
சிந்தனைகளும் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்விலும் நெடிய பண்பாட்டுப்
பயணத்திலும் நீங்காத இடம் பிடித்திருந்தன. இந்தப் பண்பாட்டுப் பயணம்
எப்போது தடுமாறியது? எப்படித் திசைமாறியது? இந்தத் திசை மாற்றத்தின்
விளைவுகள் என்ன? அண்மைக்காலங்களில் தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுக்க நாம்
மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன? இன்னும் நாம் என்ன செய்யவேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் இந்த விவாதத்தின் வேதியியல் துறையில்
செம்மொழி இலக்கியக்காலங்களில் ஏற்பட்ட வரலாற்றுப் பின்புலங்களை நாம்
நிறைவுப்பகுதியில் ஒரு எடுத்துக்காட்டாக ஆராயலாம்.
இது ஆய்வுரை அன்று, இளம் தமிழ்நெஞ்சங்களை
உற்சாகப்படுத்திச் சிந்திக்க வைக்கும் ஒரு பயிலரங்க முயற்சி. எனவே இங்கே
விடைகளைவிடச் சிந்திக்கத் தூண்டும் இளைய சமூகத்தை விடைதேடும் முயற்சிகளைத்
தொடங்கத் தூண்டுவதே நம் நோக்கம்.
செம்மொழிச் சமுதாயக் காலம்
பழமையும் தனித்துவமும் வாய்ந்த மொழிகள்
மிகச்சில. 2000 வருடங்களுக்குமேல் பழமை வாய்ந்த மொழிகள் விரல்விட்டு
எண்ணிவிடக் கூடியவை. அவற்றில் தமிழும் ஒன்று. ஆனால் நம்
தமிழ்ச்செம்மொழியைப் பற்றியும் தமிழ்ச்சமூகம் பற்றியும் பொதிய கள ஆய்வுகள்
நடந்திருக்கிறதா? இல்லை என்றால் ஏன்?
ஒவ்வொரு செம்மொழிக்கும் உற்சாகமாகக் குரல் கொடுக்கவும் ஆய்வுகளை முன்னெடுக்கவும் அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்னால் நிற்கின்றன.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment