ஆராய்ந்து அறியும் மனப்பான்மையைக் கொண்டோர் பண்புகள் எத்தகையனவாக இருக்கும்?
அரும்பயன் ஆயும் அறிவினார் சொல்லார்
பெரும்பயன் இல்லாத சொல். (பயனில சொல்லாமை: குறள் – 198)
அருமையான பயனளிக்கக் கூடியவை எவை என
ஆராய்ந்து அதனை அடைய முயலுவோர், பெரும் பயன் தராத சொற்களைப்
பேசமாட்டார்கள். அதாவது, அவர்கள் வெற்றுப் பேச்சைத் தவிர்ப்பவர்கள்.
வள்ளுவரும் அத்தகையவர் என்பதை அவர் தமது
அறநூல் கருத்துக்களைக் குறட்பாக்களாக ஈரடியில் எழுதியது
உறுதிப்படுத்துகிறது. இத்தகைய பண்பு கொண்ட வள்ளுவர் எப்பொழுதெல்லாம் ஆய்வு
செய்யவேண்டும் என்கிறார்? ‘மெய்ப்பொருள் காண்பதறிவு’ (அறிவுடைமை: குறள் –
423) என்று கூறுமிடத்து, உண்மை எதுவென்று ஆராய்ந்து அறிவதுதான் அறிவுடைமை
என்கிறார் வள்ளுவர். அவர் எந்தெந்த சூழ்நிலையில் ஆராய்வதைக் குறித்துத்
தமது திருக்குறளில் கூறியுள்ளார் என்ற ஒரு மீள்பார்வை, வள்ளுவர் எவற்றுக்கு
முக்கியத்துவம் கொடுத்தார் என்பதையும் நமக்கு அறியத் தரும். அதை
கடைபிடிப்பது வாழ்வியல் வழிகாட்டியாகவும் உதவும் என்பதும் திண்ணம்.
நாம் ஆய்வைப் பயன்படுத்த வேண்டிய சூழல்
எது? என்ற கோணத்துடன் குறட்பாக்களை ஆய்வு செய்யும்பொழுது (1) உறவுமுறை
கொள்ளுதல், (2) செயலாக்கத் திட்டங்கள், (3) வாழ்வியல் அறிதல், (4)
ஆட்சிமுறை அறங்கள் ஆகியவற்றில் ஆய்வுக் கொள்கையைக் கடைபிடிக்க வேண்டும்
என்பது வள்ளுவரின் கூற்றின் மூலம் தெளிவாகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment