ஒரு சமூகத்தின் வரலாறு என்பது
அச்சமூகத்தின் மக்கள் வாழ்வியல், அரசு, நிர்வாகம் முதலியவற்றோடு
அச்சமூகத்தின் தொழில் மற்றும் கலை சார்ந்த வரலாறாகவும் அமைகின்றது எனலாம்.
இத்தகைய தொழில் மற்றும் கலைகளின் வளர்ச்சியும் மலர்ச்சியும் திடீரென
எழுவதில்லை, மாறாகக் காலங்காலமாக எழுந்த அனுபவத்தின் படிவுகளால்
விளைகின்றன. அந்தவகையில் பழந்தமிழ்ச் சமூக வரலாறு என்பது பழந்தமிழரின்
தொழில் அறிவையும் கலைநுட்பத்தையும் அறிவது ஆகிறது. அம்முயற்சியின்
விளைவாகச் சங்க இலக்கியத்தில் அறிவியல் என்ற இக்கருத்தரங்கு நடைபெறுவது
பாராட்டிற்குரியது. அறிவியல் சார்ந்த தொழில் அறிவும் கலை பயில் நுட்பமும்
இணைந்த கட்டிடக்கலை பற்றிய தரவுகளைச் சங்க இலக்கியங்களின் வழி அறிய
முற்படுவது ஆய்வின் செல்நெறி ஆகும்.
கட்டிடவியல் :
கட்டிடக்கலை என்பது இன்றைய தொழில்நுட்ப
இயலில் பொறியியலின் பிரிவுக்குள் அடக்கிச் சுட்டப்படும் ஒரு துறையாகும்.
ஈராயிரம் ஆண்டு வரலாற்றை உடைய தமிழ்ச்சமூகத்தில் பொறியியலும் அதன்
பிரிவாகிய கட்டிடக்கலை பற்றிய அறிவும், திறனும் நுட்பமும் இருந்தன. இதனைச்
சிந்துசமவெளி நாகரிக நகரங்களான மொகஞ்சதாரோவும் ஹரப்பாவும்
மெய்ப்பிக்கின்றன. இந்த இடங்களில் அகழ்வாய்வு மேற்கொண்ட சர்-ஜான் மார்ஷலும்
ஈராஸ் பாதிரியாரும் அங்குள்ள கட்டிடடங்கள், மாளிகைகள், மண்டபங்கள்,
குளங்கள் முதலியன திராவிடக் கலைப் பாணியில் உருவானவை எனச் சுட்டுகின்றனர்.
தற்போது இந்தக்கருத்து அறிஞர்கள் பலரால் மீளாய்வுக்கு உட்படுத்தப்பட்டு
மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. ஆகவேதான் அறிஞர் உலகம், ‘தமிழரின் கட்டிடக்கலை
தமிழரின் மரபுக்கே உரியது தொல்பழங்காலம் முதற்கொண்டே தமிழர்
கட்டிடக்கலையைப் பேணி,தனிமுத்திரை பதித்து வளர்ந்து வந்துள்ளனர்’ மாத்தளை
சோமு, வியக்க வைக்கும் தமிழர் அறிவியல், ப.242 என உரைக்கின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment