Thursday 28 November 2019

உயிர்த்தோற்றம்


siragu uyiriyal5
செந்தமிழ் மொழியின் பண்டை இலக்கியங்களைச் சங்க இலக்கியங்கள் என்பர். தனித்தனிப் பாக்களால் இருந்தவற்றை அகப்பாடல்கள் என்றும், புறப்பாடல்கள் என்றும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை நானூறு என்ற எண்ணிக்கையிலும் பத்து என்ற எண்ணிக்கையிலும், நானூறு என்ற எண்ணிக்கையிலும், ஐந்நூறு என்ற எண்ணிக்கையிலும் தொகுத்துப் பண்டைத் தமிழ் அறிஞர்கள் வகைப்படுத்தித் தந்துள்ளனர்.
அவ்வாறு வகைப்படுத்தப்பட்ட சங்க இலக்கியங்களில் கடவுள் நம்பிக்கை பற்றிய செய்தியும், கடவுளால் படைக்கப் பெற்ற உடல் வகைகளைப் பற்றிய செய்தியும், அவ்வுடலை இயக்குகின்ற உயிர்களின் தன்மை பற்றிய செய்தியும், அவ்வுயிர்கள் தத்தம் பண்டை ஊழ்வினைக்கு ஏற்றவாறு உடம்பினைப் பெறுகின்றன என்ற செய்தியும் சங்க இலக்கியங்களில் இடம்பெற்றுள்ளன. சங்க இலக்கியங்களில் பல்துறை அறிவியல் சிந்தனைகள் என்ற பொதுத் தலைப்பில், சங்க இலக்கியங்களில் காணப்படும் உயிர் பற்றிய கொள்கைகளை எடுத்துக்காட்டுவது இக்கட்டுரையின் நோக்கமாகும்.

பண்டு தொட்டுத் தமிழகத்தில் வழங்கி வந்த கடவுள் கொள்கை முப்பொருளை உணர்த்தும். அதாவது வினையின் நீங்கி விளங்கிய அறிவனாக விளங்கும் இறைவன் முதற்பொருள். இறைவனைப் பதி என்ற குறியீட்டுச் சொல்லால் குறிப்பிடுவர். அந்த இறைவனின் கருணைப் பெரு வெள்ளத்தால், தனு, கரண, புவன போகங்கள் என்று கூறப்படும் உடம்பு, கருவிகள், உலகம், போகப் பொருள்கள் என்பவை படைக்கப் பெறுகின்றன. படைக்கப் பெற்ற பொருளைப் பயனுடையதாகக் கொள்வதற்குக் கடவுள் தோன்றிய பொழுதே, அவன் இயங்குவதற்குரிய நிலைக்களமாக உயிர்கள் தானே தோன்றின. அந்த உயிர்களின் இயக்கம் வினையின் அடிப்படையில் அமைகிறது என்ற வினைக்கொள்கையும் பண்டு தொண்டு வழங்கி வருகின்றது. இவ்வாறு தமிழகத்தில் கடவுள் கொள்கை பதி என்றும், உயிராகிய பசு என்றும், வினையாகிய பாசம் என்றும் முப்பொருளை அடிப்படையாகக் கொண்டு விளங்கி வருகின்றது. பதி, பசு, பாசம் என்ற கடவுள் கொள்கையின் முப்பொருளைச் சங்க இலக்கியங்கள் பலவாறு பதிவு செய்துள்ளன. அதில் உயிரின் தோற்றம் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தொகுத்துத்தர முற்படுகிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment