உணவு மனிதனின் அத்தியாவசியத் தேவைகளுள்
ஒன்று. நெருப்பு கண்டறியப்படும் முன் மாமிசம், காய், கனி, கிழங்கு வகைகள்
பச்சையாக உண்ணப்பட்டன. பின் சமைத்து சாப்பிடும் வழக்கம் உண்டானது.
காலப்போக்கில் தனக்காகவும் தன்
குடும்பத்திற்காகவும் மட்டுமல்லாமல், வியாபார நோக்கத்துடன் உணவு விற்பனை
துவங்கியது. சுவைப்பவரின் விருப்பமறிந்து உணவு தயாரிக்கும்போது அதற்கு
வரவேற்பு கிடைக்கும். உணவகங்களின் வளர்ச்சி இதை அடிப்படையாகக் கொண்டது.
உணவகங்களில் சாப்பிடும்போது நம்மை மிகவும்
கவர்ந்த உணவு வகைகளை வீட்டில் செய்து பார்ப்பதுண்டு. அதன் சுவையை
உணவகங்களில் வழங்கப்படும் சுவையோடு ஒப்பிட்டுப் பார்த்து கவலை கொள்கிறோம்.
பின் நாம் சமைத்த உணவே ஆரோக்கியமானது போன்ற ஏதோவொரு காரணத்தைச் சொல்லி
நம்மை நாமே சமாதானம் செய்து கொள்கிறோம்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment