இந்திய வரலாற்றில் காலந்தோறும்
சாதீயத்தையும் தீண்டாமையையும் எதிர்த்துக் குரல் கொடுத்தோர் பலர்.
தமிழகத்தில் பற்பல குலப் பின்னணி கொண்டவரையும் சமமாகக் கருதி தம்முடன்
இணைத்துக் கொள்ளும் நோக்கத்தை முன்வைத்தது மட்டுமின்றி, நாயன்மார்களில்
ஒருவராகவும், ஆழ்வார்களில் ஒருவராகவும் ஒடுக்கப்பட்ட குலப்பிரிவினர்களையும்
ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டது. இருப்பினும் இவ்வாறு
மேற்கொள்ளப்பட்ட மறைமுக சமத்துவ முறைகள் பலனளிக்காமல் போனதும் வரலாறு
காட்டும் உண்மை.
இம்முயற்சிகள் பலனளிக்காமல்,
இக்காலகட்டத்தையும் கடந்து, தீண்டாமையும் சாதிச் சழக்குகளும் மக்களின்
வாழ்வில் தலைவிரித்தாடியக் கொடுமையைக் கண்டித்து நேரடியாகவே பார்ப்பன
எதிர்ப்பு கலகக் குரல்கள் எழத் துவங்கிய காலம் 15 ஆம் நூற்றாண்டு.
இக்காலகட்டம் சாதி எதிர்ப்பு இலக்கியங்கள் வெளிப்படையான பார்ப்பன எதிர்ப்பு
இலக்கியங்களாகவே உருவெடுக்கத் தொடங்கிய ஒரு திருப்புமுனைக் காலமாக,
சமூகச்சீர்திருத்தக் கருத்துகளை முன்வைக்கும் ஒரு காலமாக தமிழிலக்கிய
வரலாற்றில் அறியப்படுகிறது.
மாரிதான்சிலரை வரைந்துபெய்யுமோ
காற்றுஞ்சிலரை நீக்கிவீசுமோ
மானிலஞ்சுமக்க மாட்டேனென்னுமோ
கதிரோன்சிலரைக் காயேனென்னுமோ
நீணான்குசாதிக் குணவுநாட்டிலுங்
கீணான்குசாதிக் குணவுகாட்டிலுமோ
- கபிலர் அகவல்
சந்தனம் அகிலும் வேம்பும் தனித் தனி வாசம் வீசும்
அந்தணர் தீயில் வீழ்ந்தால் அதன் மணம் வேறதாமோ ?
செந்தலைப் புலையன் வீழ்ந்தால் தீ மணம் வேறதாமோ ?
பந்தமும் தீயும் வேறோ பாய்ச்சலூர்க் கிராமத்தாரே.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment