ஒவ்வொரு மனித சமுதாயமும் நலவாழ்வைக்
கொண்டியங்குவதில் ஒரு மேம்பட்ட அறிவியல் பூர்வமான செயல்முறைகளைக்
கொண்டிருக்கின்றன என அறிகிறோம். மனித சமூகத்தில் ஏற்படும் நோய்களைக்
கண்டறிந்து, நோய்களைத் தீர்ப்பதற்கான மருத்துவ முறைகளைப் பார்க்கும்பொழுது
நோயும் மருத்துவமும் மனித இனப் பண்பாட்டு வரலாற்றில் பிரிக்க முடியாது.
ஐரோப்பியர்கள் வந்த பிறகு அலோபதி
மருத்துவமுறைகள் தமிழர்களின் வாழ்வில் இரண்டறக்கலந்துள்ளது என்றாலும்,
தமிழர்கள் காலங்காலமாகத் தனித்துவமான மருத்துவ முறைகளைக்கொண்டு வாழ்ந்து
வந்துள்ளனர் என்பதை கலை, இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், செப்பேடுகள்,
வாய்மொழி வழக்காறுகள், நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், போன்றவற்றில்
காணமுடிகிறது. இத்தகைய மருத்துவத்தை தமிழர் மருத்துவம் அல்லது
தமிழ்மருத்துவம் என்று குறிப்பிடுகின்றனர்.
கிராமப்புற மக்கள் குறித்த வாழ்வியல்
வழக்காறுகளை ஆய்வுசெய்யும் அறிஞர்கள், தமிழ் மருத்துவத்தை நாட்டுப்புற
மக்களே பெரும்பான்மையாக கையாளுவதால் இதனை நாட்டுப்புற மருத்துவம் என்பர்.
தமிழகக் கிராமப்புறங்களில் நாட்டு வைத்தியம், கைமருத்துவம், பாட்டி
வைத்தியம், மூலிகை மருத்துவம் என்றும் கூறுகின்றனர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment