அறிவுடைமை (அதிகாரம் 43) என்றே 10
குறள்கள் கொண்ட ஒரு அதிகாரத்தை அறிவுக்காக ஒதுக்கியுள்ளார் வள்ளுவர்.
மேலும் அறி, அறிய, அறிவு, அறிக, அறியும், அறிந்து, அறிந்த, அறிவது, அறியா,
அறியாமை, அறியார், அறிந்தார், அறிவார், அறிவான், அறியான், அறியேன்,
அறிவுடையார், அறிவிலார், அறிவிலான், அறிவினவர் போன்ற அறிவு குறித்த
50க்கும் மேற்பட்ட சொற்களை (54 சொற்கள்), 100க்கும் மேற்பட்ட முறை (163
முறை) அறிவின் இன்றியமையாமை, அது இல்லாவிட்டால் ஏற்படும் துன்பம்
ஆகியவற்றைக் குறித்து அறிவுறுத்தும் நோக்கில் வள்ளுவர் கையாண்டுள்ளார்.
இவற்றில் அறிந்து (39 முறை) மற்றும் அறிவு (22 முறை) ஆகிய இரு சொற்களும்
அதிக முறை அதிக அளவில் குறள்களில் இடம்பெற்றுள்ளன. அறிவின் தேவை குறித்து
வள்ளுவர் அறிவுடைமை அதிகாரம் மட்டுமின்றி மேலும் பல அதிகாரங்களிலும்
தேவைக்கேற்ப குறிப்பிடுகிறார்.
அறிவுடைமை என்பதன் விளக்கம்:
அறிவுடைமை அதிகாரம் அறிவு என்பதைக் கீழ் வருமாறு விளக்குகிறது;
பகைவரிடம் இருந்து நம்மைக் காக்கும் அரண் அறிவு (421),
மனதை அலையவிடாமல் தீமையை விலக்கி நன்மையைத் தெரிந்தெடுக்க உதவுவது அறிவு (422),
சான்றோர் அறிவுரைப்படி இன்பம் துன்பம் ஆகியவற்றை ஒரே போன்று கருதும் மனப்பான்மையைக் கடைப்பிடிக்க அறிவுறுத்துவது அறிவு (425),
அவர்கள் வழிகாட்டியபடி உலகவழக்கை ஒட்டி நடக்கச் செய்வது அறிவு (426),
தனது செயலினால் விளையக் கூடியவற்றை அறிந்திருக்க உதவுவது அறிவு (427),
அஞ்ச வேண்டியவற்றுக்கு அஞ்சி நடக்கச் செய்வது அறிவு (428),
எதிர்கொள்ளக்கூடிய துன்பத்திலிருந்து தடுத்துக் கொள்ளும் வகையை அறியச் செய்வது அறிவு (429),
இவ்வாறாக அறியும் திறன் பெற்றவருக்கு
அறிவே எல்லா செல்வத்துக்கும் இணையாக அமையும் (430) என்று அறிவின் சிறப்பை
குறள்கள் வழியே கோடிட்டுக் காட்டுகிறார் வள்ளுவர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment