ஊரடங்கு – இன்று நம் ஒவ்வொருவரின்
வீட்டிலும் நாள்தோறும் எதிரொலிக்கும் வார்த்தை. தமிழ் அகராதியில்
நாமனைவரும் மிக அதிகம் பயன்படுத்தும் வார்த்தையும் இதுவாகத்தான் இருக்கும்.
விலகியிரு, தனித்திரு, வீட்டிலிரு – இவையெல்லாம் இந்த பந்தயத்தில்
அடுத்ததடுத்து பதக்கம் பெறும் சொற்கள். தெருவெல்லாம் டிராபிக்ஜாம்,
ஜவுளிகடை, பாத்திரக்கடை, நகைக்கடை, பரோட்டாகடை என்று எங்கெங்கும் நீக்கமற
நிறைந்திருந்த நாம் எப்படி இப்படி ஒடுங்கிபோனோம்? ஆஸ்பத்திரி அல்லது வீடு
இந்த இரண்டு இடங்களைத் தவிர இன்று வேறு எந்த இடத்திலும் ஒரே மனிதனை பத்து
நிமிடத்திற்கு மேல் பார்க்கமுடியாது. ஏன்? எவ்வாறு? கொரோனா – ஆடாத ஆட்டம்
ஆடிய மானுடத்தை பெட்டி பாம்பாக கட்டி போட்டிருக்கும் இந்த குட்டி வைரஸின்
நதிமூலம், ரிஷிமூலம் சிறிது ஆராய்வோம் …
நவம்பர் 2019 உலகின் வல்லரசுகளில் ஒன்றான
சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரம். இங்குதான் அந்த நாட்டின்
மிகப்பெரிய இறைச்சி சந்தைகளில் ஒன்றான ஹுனான் மொத்த விற்பனைச்சந்தை
செயல்படுகிறது. இங்கு இறைச்சி, உயிருள்ள மீன்கள் மற்றும் உயிருள்ள
வனவிலங்குகளும் விற்பனைக்கு உண்டு.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment