அண்ணல் காந்தியடிகளின் மிக முக்கியமான
வாழ்வியல் கோட்பாடு அகிம்சையாகும். இதனை உணர்த்த, இதன் வலிமையை உணர்த்த
அவர் பல பக்கங்கள் எழுதியுள்ளார், பேசியுள்ளார், அனுபவித்துள்ளார்.
அகிம்சை வெற்றிக்கான வழி என்கிறார் காந்தியடிகள். அந்த வெற்றிக்கான
வழியைப் பெற பெற சில நிபந்தனைகளையும் அவர் முன்வைக்கிறார். அகிம்சையே மானிட
வர்க்கத்தின் நியதி. அகிம்சையே மிருக பலத்தைக் காட்டிலும் கணக்கிலடங்காச்
சிறப்பும் உன்னதமும் வாய்ந்தது.
அகிம்சை ஒருவரின் தன்மான உணர்விற்கும்,
சுயமரியாதைக்கும் பாதுகாப்பு தருவது. சொத்துகளை, செல்வங்களை ஆட்கள்
வைத்துப் பாதுகாப்பதை விட அகிம்சையைப் பின்பற்றினால் அதுவே மிகப் பெரிய
பாதுகாப்பாக இருக்கும். தவறான வழிகளில் சேர்த்த பொருள்களுக்கும்,
ஒழுக்கக்கேடான நடவடிக்கைகளுக்கும் ஒருபோதும் அகிம்சை துணை நிற்காது. ஒரு
நாட்டைத் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் தன்மைக்கு எதிரானது
அகிம்சை.
அன்புடைய எவரும் அகிம்சை வழி நிற்கலாம்.
அதற்கு இளைஞர்கள், குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள் என்ற பாகுபாடு
கிடையாது. அன்பிற்கு என்ன வேறுபாடுகள்.
“ வாழ்க்கைச் செயல்கள் முழுவதும் அகிம்சையில் அமையவேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment