சேதுபதிகள் காலத்தில் வாழ்ந்த இலக்கிய ஆளுமைகள்
இராமநாதபுர மாவட்டப் பகுதிகளை ஆண்ட
சேதுபதி அரசர்கள் தமிழும், தெய்வீகமும் வளரப் பாடுபட்டவர்கள் ஆவர். இவர்கள்
அரசவையில் தமிழ்ப்புலவர்களுக்கு தக்க இடம் அளித்தனர். பல
சிற்றிலக்கியங்கள் இவர்கள் காலத்தில் எழுதப்பெற்றன.
இராமநாதபுர தமிழ் இலக்கிய காலத்தின் வளமான காலம் இக்காலம் ஆகும்.
புராணங்கள், காப்பியம், மான்மியம்
வீரை ஆசுகவி
அரிச்சந்திர புராணம் என்பதை எழுதியவர்
வீரை ஆசுகவி ஆவார். இவரின் ஊர் நல்லூர் வீரை ஆகும். இவ்வூர் குலோத்துங்க
சோழ நல்லூர் என்றும் குறிக்கப் படுகிறது. காப்பியத்திற்கு நிகரான அளவில்
அரிச்சந்திர புராணத்தை இவர் செய்துள்ளார். இப்புராணம் திருப்புல்லாணி
திருக்கோயிலில் அரங்கேற்றம் செய்யப்பெற்றுள்ளது.
உமறுப்புலவர்
எட்டய புரத்தில் பிறந்த உமறுப்புவலர்
சீறாப் புராணம் எழுதியவர். இவரை கீழக்கரை சார்ந்த வள்ளல் சீதக்காதி என்பவர்
கொடையளித்துக் காத்தார். இசுலாமியப் பெருங்காப்பியம் இதனால் எழுந்தது.
திருவாடானை புராணம் என்பதனை திருவாரூரைச்
சார்ந்த சாமிநாத தேசிகர் என்பவர் செய்துள்ளார். திருவாடானை மான்மியம் என்ற
நூலும் சிற்றம்பல தேசிகர் என்பரால் இயற்றப்பெற்றுள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment