சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளாக
அகழாய்வுகள் அறிவியல் அடிப்படையில் முன்வைக்கும் தரவுகள் யாவும், தொன்ம
இலக்கியங்கள் (அதாவது சமஸ்கிருத மொழியில் இயற்றப்பட்ட ரிக் வேதம்,
மகாபாரதம் போன்ற இதிகாசங்கள்) சொல்லும் சரஸ்வதி ஆறு குறித்த செய்திகளுடன்
முரண்படுவதாக இருக்கிறது.
கீழடியின் தொல்லியல் தடயங்களை தமிழின்
சங்க இலக்கியத் தரவுகளுடன் இணைத்துக் காட்ட முடிவது போல சரஸ்வதி ஆறு பற்றிய
இலக்கியங்கள் தரும் வாழ்வியல் குறிப்புகளைக் கொண்டு 3300 -1300 கி. மு.
காலத்திற்குரியதாக அறுதியிட்டுக் கூறப்படும் சிந்துவெளி பண்பாடு என்பது
வேதகாலத் தொடர்புடையது என்று கூறவே இயலாது என்பதை ஆய்வாளர்கள் விளக்கமாக
எடுத்துரைத்து விட்டனர். காலத்தால் முற்பட்ட சிந்து சமவெளிப்பகுதியில்
அமைந்திருந்த இரும்பு காலத்திற்கும் முற்பட்ட நகர அமைப்புகள், குறியீடுகள்
கொண்ட அக்கால மொழி, கருப்பு சிவப்பு பானை ஓட்டுச் சில்லுகள், குதிரை
குறித்த தரவுகள் அப்பகுதியில் கிடைக்காமை போன்றன சிந்துவெளிப்பண்பாட்டின்
தனிச்சிறப்பு கொண்ட அடையாள முத்திரைகள்.
காலத்தால் பிற்பட்ட (1500 கி. மு.) வேதகால
இலக்கியங்கள் நகர வாழ்வியலைப் பற்றிக் குறிப்பிடாதவை, இரும்பு ஆயுதங்கள்
குறித்து கூறுபவை, குதிரைகள் பற்றிய செய்திகள் தருபவை, வண்ணச்சுடுமண்
பாண்டங்களைப் பயன்படுத்திய மக்களைக்குறிப்பவை, அத்துடன் அவை எழுதாக் கிளவி
என்றும் எழுத்தில்லாத மொழி என்றும் குறிப்பிடப்படும் மொழியின் தனிச்
சொத்து. ஆகவே இந்த உண்மை புரிந்தவுடன் சிந்து சமவெளி நாகரிகம் என்பது
சரஸ்வதி ஆறு நாகரிகம் என்று கூறுவதை ஒரு கட்டுக்கதை என்று உணர்ந்து
தவிர்த்துவிடுவது அறிவுடைமையாக இருக்க வேண்டும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment