ஏப்ரல் 27 1852 இல் பிறந்து, அதே மாதம்
ஏப்ரல் 28 1925 இல் மறைந்த சர் பிட்டி தியாகராயர், நீதிக்கட்சி தொடங்கிய
முன்னோடிகளில் ஒருவர். அவரைப் பற்றி, அறிஞர் அண்ணா அவர்கள் 30.6.1950 அன்று
திருவல்லிக்கேணியில் நடைபெற்ற தியாகராயரது நினைவு நாள் கூட்டத்தில் ஆற்றிய
உரையில்,
”திராவிடர்” என்ற உணர்ச்சியும் “திராவிட
நாடு” என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில்
சிக்கிச் சிதைந்துவந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை
மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப் போரிட்டுச்
சீர்கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு
ஒரு குறையுமில்லை. மற்ற பிரச்சாரங்களைவிட அறிவுப் பிரச்சாரம் தான்
முக்கியமானது என்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத்
தொடங்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றிபெற்றிருப்பதைக் கண்டு பெருமை
அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை
அடைகிறோம். அன்று தியாகராயர் மத விடயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை
எதிர்க்கவில்லை, ஏனென்றால், முதலில் அவர், திராவிடர்களுக்குத்
தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன்
முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத
விடயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை
என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment