இராமநாதபுர மாவட்டம் தென்தமிழகத்தில்
அமைந்துள்ள கடற்கரை சார்ந்த மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் கிழக்கே பாக்
ஜல சந்தியும். (பாக் நீரிணையம்), வடக்கில் சிவகங்கை மாவட்டமும்,
வடகிழக்கில் புதக்கோட்டை மாவட்டமும், தெற்கில் மன்னார் வளைகுடாவும்,
வடகிழக்கில் புதுக்கோட்டை மாவட்டமும், மேற்கில் மதுரை மாவட்டமும், தென்
மேற்கில் தூத்துக்குடி மாவட்டமும் அமைந்துள்ளன.
பாண்டிய மன்னர்களாலும், நாயக்கர்களாலும்,
சேதுபதி மன்னர்களாலும் ஆண்டு வரப்பட்ட இப்பகுதி ஆங்கிலேயர் காலத்தில்
அதாவது ஆயிரத்துத் தொள்ளாயிரத்துப் பத்தாம் ஆண்டில் மதுரை, திருநெல்வேலி
மாவட்டப் பகுதிகளில் சிலவற்றை இணைத்து உருவாக்கப்பெற்றது. புதிதாக
உருவாக்கப்பட்ட இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியர் திரு. ஜெ. எப்.
பிரையண்ட் என்பவராவர். ஆங்கிலேயர் காலத்தில் இம்மாவட்டம் ‘‘ராம் நாடு”
என்று அழைக்கப்பெற்றது. விடுதலைக்குப் பின்பு இராமநாதபுர மாவட்டம் என்று
அழைக்கப்படுகிறது.
இராமயாண காலம் தொட்டு இராமநாதபுரம் பதிவு
செய்யப்பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக இம்மாவட்டம் தொன்மையும் சிறப்பும்
வாய்ந்த்து என்பது தெளிவு. இராமபிரான் குரங்குக் கூட்டங்களை வைத்து பாலம்
அமைத்து இலங்கை சென்ற நிலையில் கட்டப் பெற்ற சேது பாலம் இன்னமும் தொன்ப
நிலையிலும், இயற்கை நிலையிலும் பெருவியப்பிற்கு உள்ளாக்குகிறது. இவ்வகையில்
இராமாயணக் காலம் தொட்டு இராமநாதபுரம் குறிப்பிடத்தகுந்த மாவட்டமாக
அமைந்திருந்த்து என்பது கருத்த்த்தக்கது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment