புத்தக
வாசிப்பு என்பது மனிதகுலத்திற்கு மட்டுமே கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய
பொக்கிசம். மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்தே, தன்னுடைய
கருத்துகளை, எண்ணங்களை, ஏதோ ஒரு வகையில் வெளிப்படுத்திக்கொண்டுதான்
இருந்திருக்கிறான். அது சைகை மூலமாகவோ, சித்திரங்களை வரைதலின் மூலமாகவோ,
ஒலி எழுப்பியோ மற்றவர்களுக்கு தன்னுடைய கருத்தை வெளிப்படுத்தியிருக்கிறான்.
இதன் நீட்சியாகத்தான், மொழி உருவாகி இருக்கிறது என்பது வரலாற்று உண்மை.
ஆரம்பகாலத்தில் வெறும் பேச்சாக மட்டுமே இருந்த மொழி, பிறகு கொஞ்சம்
கொஞ்சமாக, எழுப்பப்படும் ஒலியை பிரதானமாகக் கொண்டு, எழுத்துகளை உருவாக்கி,
அதன்முலம் தங்கள் கருத்துகளை, அனுபவங்களை நம் மூதாதையர்கள் பதிவு செய்து
வைத்திருக்கிறார்கள். அதன் தொகுப்புகள் நமக்கு ஏராளமாகக்
காணக்கிடைக்கின்றன. 2600 ஆண்டுகளுக்கு முன்னரே, தமிழர்களாகிய நாம் எழுத,
படிக்க அறிந்திருக்கிறோம் என்பது கீழடி மூலம் தற்போது
மெய்ப்பிக்கப்பட்டிருக்கிறது. எழுத்து என்பது மனிதன் சிந்தித்து,
நாகரீகமடைந்து, தன் சமூகம் சிறப்புற வாழ துவங்கியத்தின் அடையாளமாக தான்
பார்க்கப்படுகிறது. அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு, எழுத்துகள்
பரிமளித்திருக்கின்றன, வளர்ச்சியடைந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்க
ஒன்று. மேலும், அந்த எழுத்துக்களின் மூலமாகத்தான், அந்த காலகட்டத்தின்
வாழ்வியலை வருங்கால தலைமுறையினர் அறிந்துகொள்ள ஏதுவாக அமைந்திருக்கிறது
என்பது வரலாறு நமக்கு உணர்த்தும் மிகப்பெரிய ஒரு சான்று.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment