காந்தியடிகள் பெண்களையும் ஆண்களையும் ஒரே
தட்டில் வைத்துப் பார்க்கிறார். ஆணும் பெண்ணும் அடிப்படையில் ஒன்றே.
அவர்களின் ஆன்மாவும் ஒன்றே. இருவரும் அதே வகையான உணர்வுகளுடனும் ஒரே
மாதிரியான வாழ்க்கையைத்தான் நடத்துகிறார்கள். ஒருவர் மற்றொருவரை நிறைவு
செய்கின்றனர். ஒருவர் மற்றொருவரின் சுறுசுறுப்பான வாழ்க்கையின்றி
வாழ்வதற்கில்லை.
பெண்கள் தாய்மை என்ற கடமையை ஏற்கின்றனர்.
இது ஆண்களைவிட அதிகமான கடமைகளுக்கு வழி வைக்கின்றது. பெண் அகிம்சையின்
அவதாரம். குழந்தையைப் பத்து மாதம் சுமப்பது, கருவுக்கு உணவூட்டி வளர்ப்பது,
போன்றன அவளின் கடமைகள், துன்பங்கள். இவற்றில் அவள் இன்பம் காண்கிறாள்.
பிரசவ வேதனைக்கு ஒப்பான வேதனை வேறு எதுவும் உண்டா. ஆனால் ஓர் உயிரைப்
படைப்பதினால் உண்டாகும் ஆனந்தத்தில் அவள் அந்த அவஸ்தைகளையெல்லாம் மறந்து
விடுகிறாள்.
அதன்பின் குழந்தையை நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாக வளர்க்கிறாள். அன்போடு வளர்க்கிறாள். அந்தக் குழந்தைகள்
அன்பினை உலகிற்குத் தரட்டும்
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment