உலகெங்கிலும் அதி வேகமாக கொரோனா வைரஸ்
பரவி வரும் இந்த வேளையில், பொருளாதாரத்திலும், மருத்துவத்திலும் உயர்ந்த
நிலையிலுள்ள வளர்ந்த நாடுகளே இதை தடுக்க முடியாமல் திணறி வருகின்றன.
உலகளவில், நோய்த்தொற்று பரவியவர்களின் எண்ணிக்கை 30 லட்சத்தை
கடந்திருந்தது. உயிரிழப்பு 2 லட்சத்தை தாண்டியிருக்கிறது என்பது நம்
எல்லோருக்கும் மிகுந்த துயரத்தை தருகிறது. என்ன செய்வது என்றே புரியாத
நிலையில் தான் உலக நாடுகள் இருந்து வருகின்றன. இந்திய அளவில்,
பரவியவர்களின் எண்ணிக்கை 30,000 த்திற்கு மேலேயும் , உயிரிழப்பு எண்ணிக்கை
ஆயிரத்தையும் தாண்டியுள்ளது. இந்த வைரஸ் பரவலை தடுக்க முடியாமல், பல
வல்லரசு நாடுகள் தவித்து வருகின்றன. தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும்
ஆராய்ச்சியில் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு மிகுந்த முனைப்புடன் பணியாற்றி
வருகின்றன. உலகமே, கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் முயற்சியை நோக்கியே
பயணித்து வரும் நிலையில், இந்திய அரசு மட்டும் மக்களை பாதிக்கும் வேறு
விடயங்களில் கவனம் செலுத்தி வருகிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment