கேள்வி: தற்காலச் சூழலில் காட்டுயிர்களைப் பாதுகாப்பதன் அவசியம் என்ன?
பதில்:
இது ஒரு தனித்துவமான பிரச்சனை அல்ல. இயற்கையை அழித்ததினுடைய ஒரு
பகுதியாகத்தான் இன்று காட்டுயிர்ச் சூழலும் பாதுகாக்க முடியாத நிலை இருந்து
வருகிறது. குறிப்பாக நாம் பார்த்தோம் என்றால் இன்று நம்முடைய நாடாகச்
சொல்லப்படக்கூடிய இந்தியாவின் தேசியப்பறவையாக மயில் சொல்லப்படுகிறது. மயில்
தமிழ்தேசியக் கடவுள் என்று சொல்லக்கூடிய முருகனுடைய வாகனமாகவும்
சொல்லப்படுகிறது. மயிலை நாம் சிறிய வயதில் இருக்கும் பொழுது மயில் தோகைகளை
எடுத்து அது குட்டிபோடும் என்று கருதி புத்தகங்களுக்குள் வைத்துக் கொண்டு
சென்ற அனுபவம் எனக்கு இருந்திருக்கிறது, உங்களுக்கு இருந்ததா என்று
எனக்குத் தெரியவில்லை. பலருக்கும் அது இருந்திருக்கும். மயில் எல்லோராலும்
மிகவும் பார்த்து பரவசமடையக்கூடிய பறவை. ஆனால் இன்று அந்த மயில் என்பது
விவசாயிகளுக்கு மிகப்பெரிய எதிரியாக பார்க்கப்படுகிறது. காரணம் மயிலினுடைய
பெருக்கம் இன்று அளவு கடந்து போய்விட்டது.
ஏன் இந்த மயில் பெருகிவிட்டது என்று
யாரும் அதைப் பற்றிப் பேசவில்லை. இது விவசாயிகளுக்கு மிகப்பெரிய நெருக்கடி.
விவசாயி போடக்கூடிய அனைத்து பயிர்களையும் இந்த மயில் சென்று அழித்து
விடுகிறது. எப்படி திடீரென்று இவ்வளவு மயில்கள் பெருகிவிட்டது என்று
பார்த்தால், இதில்தான் காட்டுயிர்ச் சூழலுக்கான சூட்சுமம் இருக்கின்றது.
இங்கே இயற்கை உயிர்ச்சூழல் பண்பை வைத்திருக்கிறது, ஒன்றையொன்று சார்ந்து
வாழ்கின்ற ஒரு சார்பு தத்துவத்தை வைத்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இங்கே காட்டுப் பகுதிகளில் பார்த்தோம் என்றால் குட்டை மரக்காடுகளில்
குறிப்பாக காட்டுப்பூனை, கீரி, வங்காநரி போன்ற பல்வேறு உயிரினங்கள்
இருக்கும். இந்த உயிரினங்களின் மிக முக்கியமான உணவு மயில் முட்டை. இந்த
மயில் முட்டையை இவ்வுயிரினங்கள் தேடிச்சென்று சாப்பிடும். அப்பொழுது
இயல்பாக இப்படி ஒரு சூழல் இருக்கும் பொழுது இங்கே மயிலால் எந்தப்
பிரச்சனையும் இல்லை. ஆனால்
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.