பதில்: எனது பெயர்
ப.கந்தசாமி. நான் இணையம் மூலமாகவும், இணையத்தை பயன்படுத்தி எந்த அளவிற்கு
வணிகம் செய்யலாம் என்பதை நானே அனுபவித்ததினால், அதை நான் மக்களுக்கு அதிகம்
பரப்பும் எண்ணத்துடன் கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள் மூலமாக நிறைய
நிகழ்ச்சிகளை நடத்தி மக்களுக்கு என் அனுபவத்தை விரிவாக எடுத்துச்சொல்ல
ஆசைப்படுகிறேன். அந்த எண்ணத்துடன் கல்லூரி மற்றும் தொழில் நிறுவனங்கள்
மூலமாகவும் நிறைய நிகழ்ச்சிகள், நடந்துகொண்டிருக்கிறது. 1992லிருந்து இந்த
மின்னஞ்சல் மூலம் கணிணித் துறையில் நுழைய நேரிட்டது. அதன் மூலம் இணையம்
இந்தியாவிற்கு வரும் முன்பே அதைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்ள
முடிந்தது. அந்த அனுபவத்தினால் எனது தொழிலுக்கு இந்த இணையத்தையும்
கணிணியையும் எப்படி உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என்ற அனுபவம் கிடைத்தது.
கேள்வி: நீங்கள் என்ன தொழில் செய்கிறீர்கள்?
பதில்: கணிணி மூலமாக
இணையம் வழியாக மென்பொருளோ அல்லது நமக்கு என்ன தகுதி இருக்கிறதோ அதை
பயன்படுத்தி மென்பொருள் (Software Development) செய்வது, இணையம் மூலமாக
மக்களுக்கு என்னென்ன சேவையை செய்யலாம் என்பதை செய்துவருகிறேன்.
No comments:
Post a Comment