போதை,
உண்மையான துறவிகளைத் தவிர, பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கையுடன்
இரண்டறக் கலந்தது. சுயத்தை இழந்து கிளர்ச்சியடைந்த நிலையில் இருப்பதே போதை.
செய்யும் செயலில் போதை, எண்ணும் எண்ணங்களில் போதை, எழுதும் எழுத்துகளில்
போதை, படிக்கும் வார்த்தைகளில் போதை, அனுபவிக்கும் கலைகளில் போதை, இவை
ஒன்றும் இல்லாவிட்டால், அருந்தும் மதுவின் போதை! மதுவின் போதை அளிக்கும்
செயலற்ற தன்மை, செயலூக்கம் இல்லாதவர்களுக்கு, உழைப்பை வேண்டும் மற்ற
போதைகளுக்கு மாற்றாக கிடைத்த வரப்பிரசாதம்! இன்று ஒரு மாநிலமே செயலூக்கம்
இல்லாத இந்த மனிதர்கள் அருந்தும் மதுவின் மூலம் அடையும் வருமானத்தில்
ஆட்சியை நிகழ்த்துகிறது.
தமழ்நாட்டில்
வாழும் நல்லூழ் பெற்றவர்களுக்கு, கடந்த சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக,
போதை என்றாலும் TASMAC என செல்லமாக அழைக்கப்படும் தமிழ்நாடு மாநில
வாணிபக்கழகம் (Taminadu State MArketing Corporation) என்னும் தமிழக அரசு
நிறுவனம் என்றாலும் ஒன்றுதான். நாகரீகத்தில் செழித்திருந்த தமிழினத்தை
மதுப்போதையில் ஆழ்த்தி, அவர்கள் சம்பாத்தியத்தையும் ஆரோக்கியத்தையும்
பறித்தெடுத்து, வரும் வருமானத்தில் அவர்களை இலவசம் என்னும் போதையில்
அமிழ்த்தி நாட்டையும் பரிபாலனம் செய்யும் அரசுகளின் செயல்பாடுகள் அளிக்கும்
போதையில் வாழுமாறும் செய்யும் பெருந்தொண்டாற்றி வரும் நிறுவனம் இந்த
TASMAC. ஒருவேளை தமிழர்களாகிய நாம், ஒரு சமூகமாக, இதை உள்ளூர
விரும்புகிறோமாக இருக்கும். இல்லையெனில், அரசாங்கங்களுக்கு அழுத்தம்
கொடுத்து மதுவுக்கான கட்டுப்பாடுகளை கொண்டுவந்திருப்போம். அல்லது நம்
அறிவுஜீவிகள் இதனை அறிவுத்தளத்தில் எடுத்துச்சென்று, போதுமான
களப்பணியாளர்களை உருவாக்கி இருக்க மாட்டார்கள் – அந்த செயலின்மைக்குக்
காரணம் எதுவாக இருக்கும்? அரசாங்கங்களை அண்டிப்பிழைக்கும் அறிவுஜீவிகள்
அல்லது தம் அறிவை அடகு வைத்தவர்கள்!
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment