கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகத்தை கூறுங்கள்?
பதில்: எனது பெயர்
முகிலன், எனது சொந்த ஊர் ஈரோடு மாவட்டம், சென்னிமலை. எனது மனைவி பெயர்
பூங்கொடி, எனக்கு ஒரு மகன் இருக்கிறார் அவருடைய பெயர் கார்முகில். இந்த
ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறார். எனது மனைவி
சென்னிமலையில் சொந்தமாக ஒரு கணிணியகம் வைத்து செயல்பட்டு வருகிறார். நான்
பொறியியல் பட்டயப்படிப்பு முடித்தேன், முடித்துவிட்டு நான்காண்டு காலம்
பொதுப்பணித் துறையிலே பணியாற்றினேன். பின்பு அந்த வேலையில் விருப்பம்
இல்லாததால் வெளியில் வந்துவிட்டேன். எனது குடும்பம் என்பது ஒரு சிறிய
குடும்பம்தான்.
கேள்வி: தங்களுக்கு சுற்றுச்சூழலியல் ஆர்வம் எப்போது ஏற்பட்டது?
பதில்: சுற்றுச்சூழலில்
தனியான ஆர்வம் என்று ஒன்று இல்லை. சமூகத்தினுடைய நிலைமைகளில் மாற்றம்
ஏற்படுத்த வேண்டும் என்ற கருத்து எனக்கு சிறுவயதிலிருந்தே இருந்தது.
இதற்குக் காரணம் கிட்டத்தட்ட எனக்கு நினைவுதெரிந்த காலத்திலிருந்து நான்
செய்தித்தாள் படிக்க வைக்கப்பட்டேன். எப்படி என்று சொன்னால் அது ஒரு
சுவாரசியமான செய்திதான். எனது வீட்டிற்கு அருகில் சுப்பிரமணியம் என்ற
ஒருவர் இருந்தார். அவர் ஒரு முடித்திருத்தகம் வைத்திருந்தார். அவர்
சிங்கப்பூரில் சென்று பணியாற்றியவர், அதனால் அந்தக் கடையின் பெயரே
சிங்கப்பூர் சலூன் என்று இருந்தது. நான் சிறிய வயதில் முதலாம் வகுப்புப்
படிக்கும் பொழுது எங்கள் ஊரில் அந்தக் கடையில் மட்டும்தான் சுழலும்
நாற்காலி இருக்கும். எனது வீட்டிற்கு அடுத்ததாக இரண்டு கடைகளுக்கு அப்பால்
அந்தக் கடை இருக்கும். அவருக்கு படிக்கத் தெரியாது ஆனால்....
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
No comments:
Post a Comment