கேள்வி: இயற்கையை அழிக்கும் மக்களிடமிருந்து இயற்கையைக் காப்பாற்ற அரசும் மக்களும் பின்பற்றவேண்டியவை எவை?
பதில்: மக்கள் இயற்கையை
அழிக்கிறார்கள் என்று சொல்வது ஒரு தவறான வாதம். மக்கள் இயற்கையோடு இயைந்து
வாழக்கூடியவர்கள்தான். இன்றைக்கு மிகப்பெரிய மக்களாட்சி நிலவுகின்ற நாடு
எனப் பேசிக்கொள்கிறோம். ஆனால் ஏற்கனவே நிலவுடைமை சமுதாயமாக இருந்த
மன்னராட்சி நிலவிய காலத்தில் கூட இயற்கையைப் பாதுகாப்பதற்காக இயற்கையோடு
இயைந்து வாழக்கூடிய வேலையைத்தான் அனைவரும் செய்தார்கள். நம்முடைய
தமிழகத்தில்தான் நாற்பதாயிரத்திற்கும் மேற்பட்ட ஏரி, குளங்கள் இருந்தது.
இது எல்லாம் இன்று மக்களாட்சி காலத்தில் கட்டப்பட்டதல்ல. இதை மக்களாட்சி
என்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. மக்களாட்சி காலத்தில் கட்டப்பட்டதும்
அல்ல. இதெல்லாம் ஏற்கனவே இங்கே மன்னர்களாக நிலவுடைமை சமூகம் இருந்த
காலத்திலே கட்டப்பட்டது. இயற்கையோடு இயைந்து வாழ்ந்த சமூகம்.
ஒரு
தமிழ்ச் சமூகம் என்பது ஒரு ஐந்தாயிரம் ஆண்டுகால வரலாறு கொண்டது என்று
சொல்லும் பொழுது, நாம் இதை பழம்பெருமைக்காக பல்வேறு அரசியல் கட்சிகள் பேசி
வருகிறார்கள். நாம் அந்தப் பெருமையில் இருந்து பேசுவதில்லை. ஐந்தாயிரம்
ஆண்டு காலம் என்று சொல்லும் பொழுது இந்த சமூகத்திற்கு ஐந்தாயிரம் ஆண்டு
காலத்திற்கு மேற்பட்ட அறிவு இருக்கிறது. அப்படி ஒவ்வொன்றையும் காரண
காரியத்தோடு அறிந்து அதை உருவாக்கிய சமூகம் இது. அப்படி இயற்கையோடு இந்த
சமூகம் தொடர்ந்து இசைந்து பேணிக்கொண்டிருந்தது. ஆனால் முதலாளித்துவ சமூகம்
உருவான பின்பு விவசாயம் என்பது தொழிலுக்காகவும், தொழில் என்பது
விவசாயத்திற்காகவும் என்ற நிலையில்தான் முதலாளிய சமுதாயம்
உருவாகியிருந்தது. அப்படி இருந்தபொழுது இந்த விவசாயத்தையும் இயற்கையையும்
தொழிலுக்கு பயன்படுத்துவது என்ற பெயரில் விவசாயத்தின் மூலம் வரக்கூடிய
கச்சாப்பொருட்களை வைத்து தொழிலை செய்வது, தொழில் மூலம் உற்பத்தியாகக்கூடிய
பண்டங்களை விவசாயிகளுக்கும், மக்களுக்கும் விநியோகிப்பது என்ற சமூகப்
பிரிவினையை இயற்கை வளங்களை கொள்ளையடித்து தனது பணப்பையை பெருக்குவது,
இயற்கை வளங்கள் எவ்வளவு சேதமுற்றாலும் அதைப்பற்றி கவலை இல்லை, தன்னுடைய
பணப்பையை பெருக்குவது என்ற அடிப்படையிலே முதலாளிய சமூகம் மிகக்கொடூரமான
வகையிலே ஏகாதிபத்தியமாக, தன்னுடைய நாட்டை சுரண்டுவது மட்டுமல்லாமல், மற்ற
நாடுகளையும் சுரண்டுவது என்ற நிலை வந்த பொழுதுதான் இயற்கையை அழிக்கின்ற
மிகப்பெரிய கொடூரங்கள் வந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment