Tuesday, 19 May 2015

இன்ஜ் லேமேன்: புவி திடமான உட்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர்

puvi thidamaana utpagudhi5

கூகுள் டூடுல் மே 13 ஆம் தேதி (2015) அன்று “இன்ஜ் லேமேன்” (Inge Lehmann, 1888-1993) அவர்களைச் சிறப்பிக்கும் ஓவியம் ஒன்றினை வெளியிடும் வரை இன்ஜ் லேமேன் என்பவர் யார், அவர் ஆணா பெண்ணா, எந்த நாட்டைச் சேர்ந்தவர், அவருடைய எந்தப் பங்களிப்பிற்காக அவர் பாராட்டப்பட்டார் என்பது பெரும்பாலோருக்குத் தெரியாது. கூகுளின் ஓவியத்தைப் பார்த்த பிறகு அவரைப் பற்றித் தகவல் தேடி அறிந்து கொண்டோரே பலர். அவர் டென்மார்க்கில் பிறந்த டேனிஷ் பெண்மணி என்றும், அத்துடன் அவர் ஒரு ‘புவியதிர்ச்சியியல்’(seismologist) ஆய்வாளர் என்பதும் தெரிய வந்தது. மேலும், புவியின் உட்பகுதி பாறைக்குழம்பால் ஆனதல்ல, புவி திடமான நடுப்பகுதியைக் கொண்டதென்று கண்டறிந்தவர்தான் இந்த இன்ஜ் லேமேன் என்பதும் தெரிய வந்தது. அவர் நிலநடுக்க அதிர்வலைகளை ஆராய்ந்து புவியின் நடுப்பகுதியைப் பற்றிக் கண்டறிந்தார் என்று தெரிந்து கொண்ட அதே நேரம், நேபாளத்தில் மற்றொரு 7.3 ரெக்டார் நிலநடுக்கம் மேலும் பல உயிரிழப்புகளுக்குக் காரணமாக அமைந்துவிட, இன்ஜ் லேமேனின் ஆராய்ச்சி முடிவுகளின் முக்கியத்துவம் மேலும் தெளிவாயிற்று.
புவியானது 1. திடமான நடுப்பகுதியையும், 2. அதன் வெளியே திரவநிலையில் பாறைக்குழம்பாலான பகுதியையும், தொடர்ந்து 3. படிம அடுக்குப் பகுதியையும், மேலே 4. புவியோடு (solid inner core, liquid outer core, mantle, and crust) என நான்கு அடுக்குகளைக் கொண்டதென்று இன்ஜ் லேமேன் 1936 ஆம் ஆண்டு தனது “P” என்ற தலைப்பில் ஓர் ஆய்வறிக்கையை வெளியிடும் வரை, புவியின் நடுப்பகுதி பாறைக்குழம்பாலானது என்றே நம்பப்பட்டு வந்தது. இந்த ஆய்வறிக்கையில், 

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment