III. உலகப்புகழ் பெற்ற அல்கட்ராஸ்:
லண்டன் நகரில் (செப்டம்பர் 28, 2017
அன்று) அமெரிக்காவின் அல்கட்ராஸ் சிறைச்சாலை அமைப்பை அடிப்படையாகக் கொண்ட
“Alcotraz” (speakeasy-style bar called Alcotraz) என்ற ஒரு மதுபான விடுதி
திறக்கப்பட்டுள்ளது. ஒரு சிறைச்சாலையின் மாதிரியில் துவக்கப்படும் மதுபான
விடுதி என்பதுமக்களை எந்த அளவு அல்கட்ராஸ் சிறைச்சாலை ஈர்த்துள்ளது
என்பதையே காட்டி நிற்கிறது.
உலகப் புகழ் பெற்றுள்ள அல்கட்ராஸ் மத்திய
சிறைச்சாலையின் நோக்கம் கைதிகளை சீர்திருத்தி மறுவாழ்வு அளிக்கும்
நோக்கமல்ல. ஒருமுறை அல்கட்ராஸ் வந்தால் அதுவே அவர்களின் முடிவு என்ற நிலையே
இருந்தது. அதைக் கைதிகளும் அறிந்திருந்தனர். எந்த நீதிமன்றமும் அல்கட்ராஸ்
சிறையில் அடைக்கவும் எனக் கைதிகளுக்கு தண்டனைக் கொடுத்ததில்லை. பிற மத்திய
சிறைச்சாலைகளில் இருந்து தப்பிக்க முயல்பவர்கள், வன்முறையாளர்கள், அதிக
அளவு கண்காணிப்பில் இருக்க வேண்டியவர்கள் என்பவர்கள் அல்கட்ராஸ் சிறைக்கு
மாற்றப்படுவார்கள். அதாவது தண்டனை பெற்ற கைதிகள், குற்றம் செய்து அதிக அளவு
தண்டனையாக அல்கட்ராஸ் சிறைக்குப் போவது (“the prison system’s prison”)
வழக்கம். அல்கட்ராஸ் சிறைச்சாலைகளின் சிறை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment