Monday, 2 October 2017

ஜிஸ்டி ஏற்படுத்திய மாபெரும் இழப்பு


Siragu GST1
இந்த மத்திய அரசு எடுக்கும் எந்த ஒரு திட்டமும் தோல்வியில் தான் முடிந்திருக்கிறது என்பதற்கான மற்றொரு சான்றுதான் இந்த ஜிஎஸ்டி எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு. இந்த ஜிஎஸ்டி ஏற்படுத்திய தாக்கம் என்பது மக்களிடையே மிகப்பெரிய மனஉளைச்சலை ஏற்படுத்தி இருக்கிறது என்பது வருத்தத்துக்குரிய ஒன்றாகும். இது மக்களுக்கு உண்டான வாழ்வியல் தொடர்பான பாதிப்பு மட்டுமல்ல. ஒட்டுமொத்த இந்த இந்திய தேசத்திற்கான வருவாய் இழப்பு என்பதை தற்போதைய புள்ளிவிவரம் தெரிவிக்கிறது. மத்திய பா.ச.க அரசின் இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பால், வணிகவரித்துறைக்கு சுமார் ரூ.4 ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக பெட்ரோல், டீசல், மது, இயற்கை வாயு மூலம் கிடைக்கும் வருவாய் சரிந்திருப்பது தற்போது தெரிய வந்திருக்கிறது.
நம் தமிழக மாநில வணிகவரித்துறையில், ஆண்டுக்கு ரூ. 20 லட்சம் வரை வணிகம் செய்பவர்கள் கட்டாயம் அரசிடம் பதிவு செய்ய வேண்டும். அவர்களின் கணக்குகளை மாதம் ஒருமுறை என தாக்கல் செய்து வரி செலுத்த வேண்டும். மதிப்பு கூட்டு வரி, விற்பனை வரி, ஆடம்பர வரி, கேளிக்கை வரி உள்ளிட்ட வரிகள் வசூலிக்கப்பட்டு அதன் மூலம் வருவாய் கிடைக்கும்படியான முறை இருக்கிறது. ஆனால், இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பிற்கு முன், அதாவது சென்ற ஆண்டு ரூ. 67 ஆயிரம் கோடி நம் மாநில வணிகவரித்துறை வருவாயாக ஈட்டி இருந்தது. இதனிடையே இந்த சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் மூலம், கடந்த ஜூலை மாதம் முதல், 2,12,18, 28 என்ற சதவிகிதம் முறையே நான்கு அடுக்காக பொருட்களைப்பிரித்து வரி விதிக்கப்படுகிறது. இதில் என்ன கொடுமையென்றால், 
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment