பாலுவிட்டத்தைப் பார்த்து எதையோ யோசித்துக் கொண்டிருந்தான். அடிக்கடி கற்பனையில் மூழ்கி விடுவது அவன் பழக்கம்.
அப்போது தேங்காய் உடைக்கும் சப்தம்
கேட்டது. அவன் வெளியே ஓடினான். வீட்டுக்கு எதிரே இருக்கும் கோவிலின்
அர்ச்சகர் தேங்காயை சூரைத்தேங்காய் உடைத்தார். பூ விற்பவள், மற்றும்
இரண்டு சிறுவர்களும் தேங்காயை எடுக்க ஓடினர். பாலுவும் ஒரு பெரிய தேங்காய்
சிதறலை எடுத்துக் கொண்டான். அது அவனுடைய வழக்கம். சூரைத்தேங்காய் சிதறலை
எடுக்க வெட்கப்பட மாட்டான்.
அவனுக்கு ஐம்பது வயது ஆகிறது. பொறுப்பு
என்பதே கொஞ்சம் கூட கிடையாது. எப்போதும் கனவு உலத்தில் சஞ்சரிப்பான்.
கடவுள் பக்தி உண்டு. எதிரேயிருக்கும் கோவிலுக்கு அடிக்கடி செல்வான்.
அப்படிப் போகும்போதெல்லாம் சிதறு தேங்காய் கிடைத்தால் பொறுக்கி வருவான்.
அவனை அறியாமலேயே அவனுக்கு அது பழக்கமாகி விட்டது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment