கதை மனித சமுதாயத்திற்கு மிகப்பழமையான
சொத்து. காவியங்களில் நீண்ட பாட்டுக்களில் கதை அமைத்து வந்தனர். நாவல்களும்
சிறுகதைகளுமாகிய இக்கால இலக்கிய வடிவங்கள் இல்லையாயினும் கதைகள் பல
இருந்தன.
பாடுபொருளின் பரிணாம வளர்ச்சி, தட்டச்சின்
கண்டுபிடிப்பு, போன்றவை சிறுகதை என்னும் இலக்கிய வகைமையை தனித்துறையாக
வளர்த்தியது. வீரமாமுனிவர், வா.வே.சு ஐயர், புதுமைப்பித்தன் போன்றோர்
இத்துறை வளர்ச்சிக்கு மூலாதாரமாக விளங்கினர்.
சமூகத்தின் அவலங்களை அப்படியே
பிரதிபலித்துக் காட்டி தான்கூற வந்த கருத்துக்களை அழகாகவும்,
ஆழமாகவும்பதியவைக்கும் திறன் சிறுகதைக்குண்டு.
இன்றைய இலக்கியங்கள் சோலையில் தினம் தினம்
வளரும்பூக்களாய், வண்ணத்துப் பூச்சிகளாய், புற்றீசல்களாய் தோன்றிக்
கொண்டேயிருக்கின்றன. இக்கால இலக்கியங்களின் பாடுபொருள் மிக விரிவுடையதாக
அமைய வேண்டும் என்ற அவசியமில்லை. நம் அன்றாட வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளை,
மற்றும் நினைவுகளை, நடக்கின்ற நிகழ்ச்சிகளை செயல்களை நடக்கவிருக்கும்
எண்ணங்களைக் கனவுகளை என அனைத்தையும் தனது கற்பனையின் மூலம் பாடுபொருளாகக்
கொண்டு இலக்கியங்களைப் படைக்கின்றனர் தற்காலப் படைப்பாளர்கள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment