மலையின் விளிம்பில் ஒதுங்கிக் கிடந்தது
அந்த காலனி. அங்கொன்றும் இங்கொன்றுமாகக் கலைத்துப் போட்ட
தீப்பெட்டிகளைப்போல வீடுகள் இருந்தது. ஊரின் நடுவே கொஞ்சம் சமதளமான இடம்
எஞ்சியிருந்தது. அங்கேதான் மாரியம்மன் கோயிலின் அடையாளமாக ஒரு நாவல் மரம்
ஒன்று நின்றது. அதனைச் சுற்றி தரையில் குத்தப்பட்ட வேல்கள் நின்றன.
சிலவற்றில் எலுமிச்சை பழங்கள் குத்தப்பட்டிருந்தன. அந்த இடத்தைச்சுற்றி
கொஞ்சம் காலி இடமிருந்தது. குழந்தைகள் விளையாடும் இடமாகவும் மாறிப்போக,
கோயில் குழந்தைகளுக்கு மைதானமாகவும் மாறிப்போனது. ‘வொலிபோல்’ பந்துகளோ,
சிறுவர்களின் குட்டி பந்துகளோ சில நேரம் வேலில் படுவதுண்டு. வேலை விட்டு
வரும் சனங்கள் அதைப் பார்க்க நேரிட்டால்,
“இந்த சனியன் புடுச்ச வெள்ள காட்ட பாருங்க கோயில்ன்னு பாக்குதா, சாமிண்ணு பாக்குதா ஒரே ஆட்டம்தான்”
ஏசிக்கொண்டே போவார்கள். அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. கேட்டாலும் அவர்களிடம் பதிலுமில்லை. விளையாட்டு… விளையாட்டு…
ஏசிக்கொண்டே போவார்கள். அவர்கள் காதில் வாங்கிக் கொள்வதாக இல்லை. கேட்டாலும் அவர்களிடம் பதிலுமில்லை. விளையாட்டு… விளையாட்டு…
சில நேரங்களில் யார் மேலிலாவது பந்து
பட்டுவிடும். அன்றைக்கு காலனியே ரெண்டுபடும். எந்தப் பயலின் பந்து
யார்மேலில் பட்டதோ அந்த இரண்டு வீட்டின் எல்லா விசயங்களும் பொது வெளிக்கு
வந்து விடும். யார் யோக்கியம், யார் யோக்கியம் இல்லை, புள்ள வளர்த்த
லெட்சணம் எல்லாம் வெளியே வந்து சந்தி சிரித்துவிடும்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment