அண்மையில் கீழடியில் நடத்தப்பட்ட
அகழ்வாராய்ச்சி தமிழர் பண்பாடு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதை
நிரூபித்து உள்ளது. அதே போல பழங்காலத் தமிழர் பண்பாடு மூத்தோர் வழிபாடு,
நடுகல் வழிபாடு சார்ந்த பண்பாடாகும். பிற்காலத்தில் மதங்கள்
தோன்றியிருக்கின்றன. தமிழ் மொழி ஒரு சமயச்சார்பற்ற மொழி என கால்டுவெல்
எனும் மொழியியல் அறிஞர் குறிப்பிட்டு உள்ளதை நாம் எண்ணிப்பார்க்க வேண்டும்.
அந்த வகையில், சங்க இலக்கியப் பாடல்களைப்
படிக்கின்றபோது, நடுகல் வழிபாடு நம் தமிழர்களின் வாழ்வியல் முறையாக
இருந்திருக்கின்றது எனத் தெரிய வருகின்றது. வீரர்களுக்கும்,
மன்னர்களுக்கும் அவர்கள் இறந்தபின் நடுகல் வைத்து வணங்கும் பழக்கம்
நம்மிடையே இருந்திருக்கின்றது. மதம் என்ற நிறுவனமயம் ஆக்கப்பட்ட அமைப்பு
நம்மிடையே சங்க காலத்தில் இல்லை. திணை வழிபாடு இருந்துள்ளது. இயற்கையை
தமிழர்கள் வழிபட்டிருக்கின்றனர். ஆனால் இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்தி ஒன்று
இருக்கின்றது என்றோ அது தான் இயற்கையை, மனித வாழ்க்கையை
கட்டுப்படுத்துகின்றது என்றோ, மனிதர்களை ஒரு கடவுள் தான் படைத்தார் என்ற
கருத்து முதல்வாதம் எந்த மதம் சார்ந்தும் வாழாத தமிழர்களிடம் ஆதியில்
இல்லை.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment