நூல்: பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள்
ஆசிரியர்: சி. ஜெயபாரதன்
அறிவியல் தமிழுக்கு ஆக்கப்பூர்வமான
பங்களிப்பு செய்துவரும் அணுவியல் விஞ்ஞானி திரு. சி. ஜெயபாரதன் அவர்களுக்கு
அறிமுகம் தேவையில்லை. இணையம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு 2000 ஆண்டுகளில்
அறிமுகமாவதற்கும் ஒரு கால் நூற்றாண்டிற்கும் முன்னரே எழுதுவதை ஒரு
தன்னார்வப் பணியாகத் தொடங்கியவர் அவர். கதை, கவிதை, நாடகம், மொழிபெயர்ப்பு
போன்ற இலக்கியப் பங்களிப்புகளும், அறிவியல் கட்டுரைகள் வழங்குவதிலும்
இவருக்கு ஈடு இணை கிடையாது. அவர் எழுத்துக்களில் மிகவும் பாராட்டப்பட
வேண்டிய பகுதி அவரது அறிவியல் பங்களிப்புகளே. தமிழில் கதையும், கவிதையும்,
கட்டுரைகளும் எழுத எண்ணிறைந்தவர்கள் உள்ளனர். ஆனால் தமிழில் அறிவியல்
குறித்து எழுதுபவர்கள் மிகவும் சொற்பமே. ஆகவே அவரது அளப்பரிய பங்களிப்பின்
தேவையை விளக்கிச் சொல்லத் தேவையில்லை.
நாம் எதிர் கொள்ளும் சம கால நிகழ்வுகளான
புவியதிர்ச்சி, ஆழிப்பேரலைகள், சந்திர கிரகணங்கள், சூரிய கிரகணங்கள்,
எரிமலை வெடிப்பு, துருவப்பனி உருகுதல், சுற்றுச் சூழல் மாற்றங்கள், செயற்கை
விண்கோள்கள், செவ்வாய் கோளுக்குப் பயணம் என அறிவியல் உலகத்தின் தற்காலச்
செய்திகளை, கடந்த 15 ஆண்டுகளாக இணையம் வழியாக விரைவில் அவர் தமிழுக்கு
மாற்றும் இடையறா முனைப்பின் காரணமாக நாம் அந்த நிகழ்வுகளின் அறிவியல்
பின்னணிகளை விளக்கமாக அவரது கட்டுரைகளின் மூலம் அறிந்து கொள்கிறோம். ஒரு
அறிவியலாளர் ஆய்வு நோக்கில் செய்திகளைத் தொகுத்து, படங்களுடன் எளிமையாக
விளக்கி, சான்றுகளுடன் இணைத்துத் தரும் முறை நம்பிக்கையுடன் அறிவியல்
அறியும் வாய்ப்பாகவும் தமிழருக்கு அமைந்துள்ளது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.