தமிழ் உயரிய மொழி செம்மொழி என்ற பெருமைகளை
எல்லாவற்றைக் காட்டிலும் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் உயிர்மொழி என்ற
பெருமையே அதன் சிறப்பும் தேவையும் ஆகும். தமிழர்கள் பிரிந்து
கிடக்கிறார்கள், உலகெங்கும் விரவிக் கிடக்கிறார்கள். அவர்களிடம் தமிழ்மொழி
சற்றே ஒட்டிக் கிடக்கிறது. இதனை வலுப்படுத்தாவிட்டால் தமிழ் என்னும் தாய்
மொழி தாயாகும் தன்மையை இழந்து வெறும் ஏட்டுமொழியாகிவிடலாம்.
இலங்கை, சிங்கப்பூர் மலேசியா, மொரிஷியஸ்,
ஆஸ்திரேலியா இன்னும் பற்பல இடங்களில் தமிழர்கள் இன்று தம் மொழியை
முன்னிறுத்தி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் எதிர்கொள்ளும் சவால்களைச்
சிக்கல்களை உற்றுக்கவனிக்க என்ன செய்ய இயலும்?
தமிழகத்திலும் தமிழர்கள் பிரிந்து
கிடக்கிறார்கள். தமிழகத்தில் சாதி அவர்களைப் பிரிக்கிறது. சாதித் தொகுதிகள்
பிரிக்கின்றன. தமிழர்களை ஒருங்கிணைக்க ஒரே வழி தமிழ்தான்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment