நிவேதிதா பன்னாட்டு கம்பெனி ஒன்றில்
விற்பனைப் பிரிவில் மேலாளராக பணி செய்கிறாள். வயது முப்பத்திரண்டு. படிப்பு
பி.காம், எம்.பி.ஏ, வசீகரிக்கும் குரல். இசை ஞானம் உடையவள். தெய்வீக
விசயங்களிலும் அவளுக்கு ஈடுபாடு அதிகம். கவிதையின் நயமுள்ளவள். சராசரி
பெண்ணாக இல்லாமல் சாதிக்க வேண்டும் என்னும் லட்சியத்தையுடைய அவளுக்கு
இரண்டு குழந்தைகள். ஐந்து வயதில் நரேன், இரண்டு வயதில் ஸ்வாதி. கணவர்
முகுந்தன் ஒரு நிறுவனத்தில் பொறியாளராக வேலை செய்கிறான். அவர்களுடைய
குடும்ப படகு, வாழ்க்கை என்னும் நதியில் அமைதியாய் போய்க் கொண்டிருந்தது.
அவள் கருணை உள்ளம் கொண்டவள். இல்லாவிட்டால் வீட்டு வேலைகாரிக்கு மிக்சி வாங்கிக் கொடுக்க மனம் வருமா?.
ஒரு நாள் அவளின் மார்பில் உண்டான சிறு கட்டி வலியைக் கொடுத்தது. டாக்டரிடம் காண்பிக்கலாம் என்று சில காலம் தள்ளிப் போட்டாள்.
நாட்கள் ஆக ஆக அவளால் நெஞ்சு வலியைத்
தாங்க முடியவில்லை. மார்பில் இருந்த கட்டி கொஞ்சம் கொஞ்மாக வளர்ந்து கொண்டே
வந்தது. மருத்துவரிடம் போய் காண்பிக்க வேண்டும் என்று நினைத்தாள். ஆனால்
அவள் பணி செய்யும் அலுவலகத்தில் ஆண்டு விழா நடைபெற இருப்பதால் அது
முடிந்ததும் மருத்துவரிடம் கண்டிப்பாக போகலாம் என்று தள்ளிப் போட்டாள்.
அவள் எப்போதும் அப்படித்தான். வேலை, வேலை, வேலை …………….என்றிருப்பாள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment