Thursday, 14 December 2017

நல்லதேசம் (சிறுகதை)


siragu-nalla-desam1


மரகததேசத்தின் மன்னர் விக்ரமன், சிறுவயதிலேயே பட்டத்திற்கு வந்தவர். சிறந்த அறிவாற்றல் கொண்டவர். ஆனால் அரசகாரியங்களில் போதிய அனுபவம் இல்லாதவர். வயதில் மூத்தவர் என்ற முறையில் மந்திரியார் நிறைமதியார்தான் பல சந்தர்ப்பங்களில் மன்னருக்கு வழிகாட்டிவந்தார். “ஒரு தேசம் எப்படிப்பட்டதாக இருக்கவேண்டும், ஒரு தேசத்தின் குடிமக்கள் ஒரு மன்னனிடம் எதை எதிர்பார்ப்பார்கள் என்பதை எல்லாம் நிறைமதியார் மன்னருக்கு உணர்த்த விரும்பினார். மன்னருக்கு நேரிடையாக அறிவுரை கூறுவது ஏற்புடையதல்ல. வேறு எப்படிச் சொல்வது என்ற யோசனையில் இருந்த சமயம். ஒரு நாள் புலவர் மகேசன் நிறைமதியாரைக் காணவந்தார். 

புலவர் மகேசன் ஒரு வானம்பாடி. தேசம் தேசமாகச் சுற்றுபவர். பற்றுக்கள் இல்லாதவர். அனைத்து தேச மக்களும் வளமுடன் வாழவேண்டும் என்ற விருப்பம் கொண்டவர். அவரிடம் மந்திரியார் தனது எண்ணத்தைச் சொன்னார். நீண்ட தனது வெண்தாடியை வருடியபடி யோசித்த புலவர் “நான் இதற்கு ஒரு வழி செய்கிறேன்!” –என்றபடி மந்திரியாரின் காதில் ஏதோ கிசுகிசுத்தார். மந்திரியாரும் அதை ஆமோதித்து ஏற்றுக் கொண்டார்.

மன்னர் விக்ரமன் ஒருநாள் அவையில் அமர்ந்து அளவளாவிக் கொண்டிருந்தார். அப்போது புலவர் மகேசன் அங்கு வந்தார். புலவர்கள் என்றால் வறுமையில் வாடுபவர்கள், எதையாவது இரந்து பெற கவிபாடுபவர்கள் என்ற எண்ணம் கொண்டவர் மன்னர். அவர் புலவர் மகேசனை ஏளனம் செய்யும் விதமாக, என்ன புலவரே, உமது வீட்டுப் அடுக்களையில் பூனை படுத்துறங்குகிறதோ? எம்மைக் கவிபாடி பரிசில் பெறவந்தீரோ?” – என்று கேட்டார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

No comments:

Post a Comment