இரு தினங்களுக்கு முன்பு திருப்பூர்
நீதிமன்றம், ஒரு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பு ஒன்றை வழங்கி இருக்கிறது.
அது நீதிபதி அலமேலு நடராஜன் அவர்கள் வழங்கிய தீர்ப்பு, என்னவெனில்
ஆணவப்படுகொலைக்கு எதிராக முதல்முறையாக கடுமையான, அதிகபட்ச தீர்ப்பு
வழங்கப்பட்டிருக்கிறது என்றுதான் சொல்லியாக வேண்டும்.!
உடுமலைப்பேட்டை சங்கர் கடந்த ஆண்டு மார்ச்
மாதத்தில், பட்டப்பகலில், நாடு ரோட்டில் படுகொலை செய்யப்பட்டார். சாதி
மாறி திருமணம் செய்துகொண்ட ஒரு செயலால் சாதிவெறியர்களால், அதுவும்,
தன்னுடைய மனைவியின் பெற்றோர்களாலேயே, கூலிப்படையினரைக்கொண்டு அரிவாளால்
சரமாரி வெட்டப்பட்டு உயிரிழந்தார். இவையெல்லாம், கணநேரத்தில் தன் மனைவி
கண்முன்னாலேயே நடந்து முடிந்திருக்கிறது. அது மட்டுமல்ல… சங்கரின் மனைவி,
கௌசல்யாவையும் தாக்கியிருக்கிறார்கள். தீவிர சிகிச்சைக்குப்பிறகு
உயிர்பிழைத்திருக்கிறார் கௌசல்யா.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment