Wednesday 25 April 2018

சிற்றில்


siragu sitril2
ஆத்தோரம் மணல் எடுத்து அழகழகாய் வீடு கட்டி
தோட்டமிட்டு செடி வளர்த்து ஜோராக குடியிருப்போம்
வெய்யிலிலே குளிர்ந்திருக்கும் வேலியிலே குடிலிருக்கும்
கையளவு கதவிருக்கும் காற்று வர வழியிருக்கும்
வழிமேலே விழி இருக்கும் வந்தவர்க்கெல்லாம் இடமிருக்கும்…..!
ஒரு பழைய தமிழ்த் திரைப்படப் பாடல். கண்ணதாசனின் வரிகள் இவை. இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் சிற்றில் அதாவது சிறிய மணல் வீடு என சங்க இலக்கியப் பாடல்களில் குறிப்பிடப்பட்ட வரிகள் தான் நினைவிற்கு வரும். சங்க இலக்கியப் பாடல்கள் சிலவற்றில் இந்த மணல் வீடு பற்றியக் குறிப்புகள் உண்டு.

பிள்ளைத் தமிழ் இலக்கணத்தில் சிற்றில் பற்றியப் பாடல்கள் உண்டு. புலவர்கள் தாங்கள் விரும்பிய கடவுளையோ, அரசனையோ, வள்ளலையோ, சான்றோரையோ குழந்தையாக எண்ணிப் பாடுவது பிள்ளைத்தமிழ் ஆகும். இது குழந்தையின் மூன்றாம் மாதம் முதல் 21ஆம் மாதம் வரை ஒரு பருவத்திற்கு இரண்டு திங்கள் என வகுத்துக் கொண்டு பத்துப் பருவங்களில் வைத்துப் பாடப்படுவதாகும். இதில் ஒரு பருவத்திற்குப் பத்துப் பாடல்கள் வீதம் பத்துப் பருவங்களுக்கு மொத்தம் 100 பாடல்கள் பாடப்படும். இவ்விலக்கியம் ஆண்பாற் பிள்ளைத் தமிழ், பெண்பாற் பிள்ளைத் தமிழ் என இரண்டு வகைப்படும். இதில் பதினேழாவது மாதத்தில் பாடப்படும் பாடல்கள் சிற்றில் இடம்பெறும். இப்பருவத்தில் பெண் குழந்தைகள் கட்டி விளையாடும் சிற்றிலை ஆண் குழந்தைகள் சென்று சிதைப்பதாகக் கூறப்படும். (சிற்றில் = சிறு வீடு)

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/

கிளிக்கூண்டும் அரசியலும் (கவிதை)


siragu kilikkoondum1

கிளிக்கூண்டும் அரசியலும்
எத்தனைக் காலமடி இத்துயரம் -பின்னும்
இத்துயரம் நம்மைப்பின் தொடரவோ?
கூண்டில் அடைபட்ட சுகம்தான் -இன்னும்
கண்ணுக்கு ஒளியைத் தருவதோ?
வீதிவரை வந்ததடி துன்பம் -பின்னும்
வீடுவரை வாராது போகுமோ?

நின்சிறகு அசையாது போயின் -பின்னே
நீகாணும் உலகம்கை வருமோ?
சிறகிலும் உனக்குத் தெம்புண்டு -இன்னும்
சிறையில் வாசம் ஏனடியோ?

எதிரில் விரிந்த வானமுண்டு -பின்னும்

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%81%E0%AE%AE/

Friday 20 April 2018

கண்ணாடிக் கதவுக்கு அப்பால் (சிறுகதை)


siragu kannaadikku appaal1

நான் கோயம்பேடு ரயில் நிலைய நடைமேடையில் நுழையும் போது  ரயிலும் வந்து கொண்டிருந்தது. அப்போது நேரம் காலை எட்டு மணி.  மெட்ரோ சேவை கோயம்பேடிலிருந்து ஆலந்தூர் வரை உண்டு. ரயில் நின்றதும் கதவு திறந்தது. நடைமேடையில் ஒரு இளைஞன் என் பக்கத்தில் நின்றிருந்தான். அவன் கையில் ஒரு ரோஜா பூவை வைத்திருந்தான்.

சில வினாடிகள்தான் ரயில் நிற்கும்  என்பதால் நான் ரயிலில் உடனே  ஏறி விட்டேன். அவன் யாருக்காகவோ காத்திருந்தான். அப்போது ஒரு இளமங்கை ஓடி வந்தாள். அவள் ஒல்லியான உடற்கட்டுடன் கூர்மையான கண்களுடன் அழகு பதுமையாய் அதிக வசீகரத்துடன் இருந்தாள். அடர்த்தியான கூந்தல் இடுப்புக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தது.  அவன் சிரித்த முகத்துடன் தன்னிடமிருந்த ரோஜாப் பூவை அவளிடம் கொடுத்தான். அவள் ரோஜாவை தலையில் சூடிக் கொள்ள இருவரும் அவசரமாக ரயிலுக்குள் ஏறினார்கள். உடனே கதவு மூடியது. கதவிலே  பாதி கண்ணாடி. பிளாட்பாரத்தில் நிற்பவர்களை எல்லாம் உள்ளேயிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சாதாரண மின்சார வண்டி போல் கூட்டமாக  இல்லை.   தாராளமாக உட்கார்ந்து போக இடம் இருந்தது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Thursday 19 April 2018

இசையறிஞர் சுப்பராம தீட்சிதர்


Subbarama Dlksitar

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும் இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுர அரண்மனையின் அரசவைக் கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் திரு. சுப்பராம தீட்சிதர். இவர் எழுதிய “சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி” (Sangita Sampradaya Pradarsini/ “ஸங்கீத ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ”) என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப் பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம்.

திரு. சுப்பராம தீட்சிதர் (1839-1906) இசை மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர் அவர்களின் இசைக்குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டயபுரம் மன்னரின் அரசவை கர்நாடக இசைக் கலைஞராக தனது இறுதி நாட்களில் பணியாற்றினார் முத்துசுவாமி தீட்சிதர்.  அவருக்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் பாலுசாமி தீட்சிதர் அப்பொறுப்பில் இருந்தார். பாலுசாமி தீட்சிதரது மகள் அன்னபூரணிக்கும் திருவாரூரைச் சேர்ந்த சிவராம ஐயருக்கும் 1839 இல் பாலசுப்ரமணிய சர்மா என்ற இயற்பெயர் கொண்ட இரண்டாவது மகனாகப் பிறந்தார்  சுப்பராம தீட்சிதர்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 18 April 2018

சிலைகள் உடைப்பு


siragu silaigal udaippu2
திரிபுரா மாநிலத் தேர்தலில் பா.ச.க. வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, அதாவது பா.ச.க. ஆட்சிக் கட்டிலில் அமர்வதற்கு முன்பேயே, அவசர அசரமாக அங்கே லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் பா.ச.க. ஆட்சி அமைத்தால் பெரியார் சிலைகள் அனைத்தும் உடைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரான எச்.ராஜா அறிவித்தார். காவிகள் ஓரிடத்தில் பெரியாரின் சிலையைச் சேதப்படுத்தவும் செய்தனர்.

ஆனால் தமிழ் நாட்டில் இதற்குக் கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. திராவிட இயக்கத்தினர் மட்டும் அல்லாது அனைத்து மக்களும் அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தது ஒரு சிறப்பாகும். அதுவும் “நாங்கள் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். பெரியார் கடவுளை மறுப்பவர் என்பதும் நன்றாகத் தெரியும். அந்த வகையில் பெரியாருடன் மாறுபட்டாலும், அவர் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஆற்றிய பெரும் பணியை அறிவோம். எங்கள் வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவர் தான் வழிகாட்டி” என்று தெளிவான முழக்கத்துடன் அவர்கள் குரல் கொடுத்ததானது பெரியாரின் எதிரிகளை மிரளச் செய்து இருக்கிறது.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 17 April 2018

தென் ஆப்பிரிக்காவின் தாய் – வின்னி மண்டேலா !!


siragu winne1

வின்னி மண்டேலா ஏப்ரல் 2 ஆம் தேதி, 2018 அன்று மறைந்தார். சில தொலைக்காட்சி செய்திகளும், தமிழ் நாளிதழ்களும் வின்னி மண்டேலாவின் மறைவைப் பற்றி இரங்கல் தெரிவித்திருந்த போதிலும், அவரை நெல்சன் மண்டேலா அவர்களின் முன்னாள் மனைவி, அவரோடு இணைந்து நிற வெறிக்கு எதிராகப் போராடியவர் என்ற வரிகளோடு இரங்கற் செய்தியை முடித்துக் கொண்டனர். ஆங்கில நாளிதழ் ஒன்று அவரைப் பற்றிய இரங்கற் செய்தியில், “Winnie Mandela, South African anti-apartheid crusader, dies at 81″ என்று எழுதியிருந்தது. இது தான் தமிழ் நாளிதழ்களுக்கும் -ஆங்கில நாளிதழ்களுக்கும் உள்ள வேறுபாடாக நாம் பார்க்க வேண்டும். ஒரு பெண்ணின் சாதனைகளை முன் நிறுத்துவதில் உள்ளச் சிக்கல்.

siragu winne3


கொலைக் குற்றம் சாட்டப்பட்டு பின் கடத்தலுக்கான அபராதத் தொகை கட்டி வெளிவந்து, தன் அரசியல் வாழ்க்கையை மீண்டும் தொடங்கியதில் பல சறுக்கல்கள், தவறுகளை வின்னி செய்ததாக அவரின் நாட்டு மக்கள் கூறினாலும், நிற வெறியை எதிர்த்து அவர் போரிட்டதை, அம்மக்கள் நினைவு கூர்ந்து, அவருக்கு தங்கள் அரசு இறுதி வணக்கம் செலுத்தும் என்று கூறியுள்ளனர். பல்வேறு கருத்து மாறுபாடுகள் இருந்தாலும், நெல்சன் மண்டேலாவிடம் இருந்து மண விலக்கு பெற்றபோதிலும், அவர் தன் மரணம் வரை தென் ஆப்பிரிக்காவின் தாய் “Mother Of South Africa” என்றே இன்றும் அழைக்கப்படுகின்றார்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Wednesday 11 April 2018

மத்தியஅரசின் தொடர் தாக்குதல்களுக்கு உள்ளாகும் தமிழகம்


கடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக மாறிக்கொண்டிருக்கும் நிலைமையை மத்திய பாசக அரசு ஏற்படுத்தியிருக்கிறது என்பது  நாம் அனைவரும்  அறிந்த ஒன்று. ஆனால், சமீப காலமாக, மிக அதிக அளவில், இந்தத் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது என்பது மிகவும் வேதனையான ஒன்றாகத்தான் தமிழக மக்களுக்கு இருக்கிறது.
Siragu-state-govt3
முதலில், நீட் என்ற நுழைவுத் தேர்வு மூலம் கல்வியில் கைவைத்தது மத்திய மதவாத மோடி அரசு. இதன்முலம் நம் தமிழக ஏழை, கிராமப்புற  மாணவர்களின் மருத்துவக் கனவு தகர்க்கப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று, சட்டமன்றத்தில், அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஏற்று, தீர்மானம் போட்டு சட்டமியற்றியத்தை, குடியரசு தலைவரின் கையொப்பத்திற்காக அனுப்பியதை, மத்திய மோடி அரசாங்கம் கிடப்பில் போட்டு,  காலம் தாழ்த்தி மத்திய கல்வி பாடத்  திட்டத்தின் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டு, நீட் தேர்வை நடத்தியே விட்டது. நம் மாநில மாணவர்கள் நம் மாநிலத்து திட்டத்தின் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவம் சேர முடியாத நிலையை ஏற்படுத்தி, அதனால், நம் அறிவு செல்வம் அனிதாவை பறிகொடுத்தோமே, மறக்கத்தான் இயலுமா.!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/

Thursday 5 April 2018

இது நரக பூமி! (கவிதை)


mullivaaikkaal2
ஈழத்திலே!
பார்வதிகளும்
கணபதிகளும்
கொன்றழிக்கப்பட்டபோது
அந்த பரமசிவனும் வரவில்லை!
பாஞ்சாலிகளின்
துகிலுரிக்கப்பட்டபோதும் உடன் காத்திட
அந்த பரமகிருஸ்ணரும் கருணை காட்டவில்லை!

மரியாக்களும்
பிலிப்புகளும்
பட்டினியால் மடிந்தபோதும்
அந்த இயேசு பிரானும் இரக்கம் காட்டவில்லை!

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%87%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%B0%E0%AE%95-%E0%AE%AA%E0%AF%82%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%88/

Wednesday 4 April 2018

தலித்திய அரசியல் பதிவுகளில் முதன்மை


siragu-thotti-magan3
(தகழி சிவசங்கரப் பிள்ளையின் தோட்டியின் மகனை முன்வைத்து)
சமீப காலங்களில் நாம் அதிகம் விவாதிக்கத் தொடங்கியிருக்கிற சொல்லாடல் “தலித்தியம்”. நவீன காலத்திய நாகரீகம் வளரத் தொடங்கிய போது பல்வேறு விதமான பிரச்சனைகளைப் பற்றி பேச ஒரு வழி பிறந்தது. அது பலதரப்பட்ட மக்களின் வாழ்க்கையில் பெருமளவிலான தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும் சொல்லலாம். ஆனாலும்,அது தன் பழைய மரபானவற்றின் தொடர்ச்சியிலிருந்து முற்றிலும் விடுபட்டுவிட முடியாமல் ஏற்றத் தாழ்வுகளை அதிக அளவில் பிரதிபலித்தது.
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முந்தைய சில ஆண்டுகள் ஜமீன்தாரி முறையானது உச்சகட்டத்தை எட்டியிருந்த காலம். அது அரசாங்கத்தை ஆதரிப்பவர்களுக்கு வேண்டிய பலன்களை நிலம் முதல் அதிகாரம் வரையிலான இன்ன இன்ன விவகாரங்கள் வரையிலும் அளித்துவந்தது. அதன் முகம் மிக கோரமானதாக்,பாமர மக்களின் அடித்தட்டு வாழ்க்கையை நிர்மூலமாக்கியதுடன் அவர்களது அடிமை நிலையை நிலை நிறுத்தவும் பல்வேறு விதமான வகைகளில் முயற்சிகளை மேற்கொண்டது.

இதன் விளைவாக நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர் இயக்கங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டன. அவற்றில் சில அமைப்புகள் நிலவுடமையாளர்களுக்கு மிக விசுவாசமாக நடந்து கொண்டன. அது முதலாளித்துவம் பாமரர்களிடத்தில் ஊடுருவம் தந்திரம்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.

Tuesday 3 April 2018

“கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உற்பத்தியும் அதனால் தோன்றும் புதைகுழிகளும்“


siragu kachchaa ennai1

‘புதைகுழிகள்’ அல்லது ‘புதைபள்ளங்கள்’ (Sinkholes) என்பன ‘சுண்ணாம்புக் கரட்டுப் பள்ளங்கள்’  எனவும் அறியப்படுகின்றன. இவை இயற்கையாகப் புவியின் நிலப்பரப்பில் தோன்றும் குழிகளும் பள்ளங்களுமாகும், பல அளவுகளிலும் ஆழங்களிலும் இவை வேறுபட்டிருக்கும். இவற்றில் நீர் நிரம்பி ஏரி, குளம், குட்டைகளும் பின்னர் தோன்றுவதுண்டு. நிலப்பரப்பின் மேற்புறம் மண்ணால் உறிஞ்சப்பட்ட நீர் உட்சென்ற பிறகு, அந்த நிலத்தடி நீரினால் புவிக்கு அடியில் உள்ள சுண்ணாம்புக் கற்படுகைகள், உப்புப்பாறைகள் ஆகியவை அரிக்கப்பட்டு, அவை நீரில் கரைந்து நொறுங்கி வலுவிழந்து அவற்றின் மேல் உள்ள நிலத்தின் சுமையைத் தாங்க இயலாது நிலம் சரிந்து உள்வாங்கி குழிகளை ஏற்படுத்தும். 

அக்குழிக்குள் நிலத்தின் மேலிருப்பவை புதைந்து மூழ்கிவிடும். புயல் மழை ஆகியவற்றால் ஏற்படும் பெரு வெள்ளங்கள், அல்லது நிலத்தடி நீர் குறைவது, நிலத்தடியில் நீர் ஓரிடத்தில் தேங்கத் தொடங்குவது போன்ற செயல்கள் புதைகுழி தோற்றத்திற்குக் காரணங்களாக அமைகின்றன. இப்புதைகுழிகள் கொஞ்சம் கொஞ்சமாக நிலத்தின் மேற்பரப்பு தாழ்வதாலோ அல்லது, திடீரென நிலம் உள்வாங்குவதாலோ தோன்றுவதும் உண்டு. சுருக்கமாக நிலத்தடிநீர் அளவு ஏற்படுத்தும் மாற்றத்தின் விளைவு புதைகுழிகள்.

மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.