நான் கோயம்பேடு ரயில் நிலைய
நடைமேடையில் நுழையும் போது ரயிலும் வந்து கொண்டிருந்தது. அப்போது நேரம்
காலை எட்டு மணி. மெட்ரோ சேவை கோயம்பேடிலிருந்து ஆலந்தூர் வரை உண்டு. ரயில்
நின்றதும் கதவு திறந்தது. நடைமேடையில் ஒரு இளைஞன் என் பக்கத்தில்
நின்றிருந்தான். அவன் கையில் ஒரு ரோஜா பூவை வைத்திருந்தான்.
சில வினாடிகள்தான் ரயில் நிற்கும் என்பதால்
நான் ரயிலில் உடனே ஏறி விட்டேன். அவன் யாருக்காகவோ காத்திருந்தான்.
அப்போது ஒரு இளமங்கை ஓடி வந்தாள். அவள் ஒல்லியான உடற்கட்டுடன் கூர்மையான
கண்களுடன் அழகு பதுமையாய் அதிக வசீகரத்துடன் இருந்தாள். அடர்த்தியான
கூந்தல் இடுப்புக்குக் கீழே தொங்கிக் கொண்டிருந்தது. அவன் சிரித்த
முகத்துடன் தன்னிடமிருந்த ரோஜாப் பூவை அவளிடம் கொடுத்தான். அவள் ரோஜாவை
தலையில் சூடிக் கொள்ள இருவரும் அவசரமாக ரயிலுக்குள் ஏறினார்கள். உடனே கதவு
மூடியது. கதவிலே பாதி கண்ணாடி. பிளாட்பாரத்தில் நிற்பவர்களை எல்லாம் உள்ளேயிருந்து தெளிவாகப் பார்க்க முடியும். சாதாரண மின்சார வண்டி போல் கூட்டமாக இல்லை. தாராளமாக உட்கார்ந்து போக இடம் இருந்தது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment