கடந்த ஓராண்டு காலத்தில், தமிழ்நாடே தொடர்ந்து போராட்ட களமாக
மாறிக்கொண்டிருக்கும் நிலைமையை மத்திய பாசக அரசு ஏற்படுத்தியிருக்கிறது
என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. ஆனால், சமீப காலமாக, மிக அதிக
அளவில், இந்தத் தாக்குதல் தீவிரமடைந்திருக்கிறது என்பது மிகவும் வேதனையான
ஒன்றாகத்தான் தமிழக மக்களுக்கு இருக்கிறது.
முதலில்,
நீட் என்ற நுழைவுத் தேர்வு மூலம் கல்வியில் கைவைத்தது மத்திய மதவாத மோடி
அரசு. இதன்முலம் நம் தமிழக ஏழை, கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவு
தகர்க்கப்பட்டது. தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று,
சட்டமன்றத்தில், அனைத்துக் கட்சிகளும் ஒருமனதாக ஏற்று, தீர்மானம் போட்டு
சட்டமியற்றியத்தை, குடியரசு தலைவரின் கையொப்பத்திற்காக அனுப்பியதை, மத்திய
மோடி அரசாங்கம் கிடப்பில் போட்டு, காலம் தாழ்த்தி மத்திய கல்வி பாடத்
திட்டத்தின் அடிப்படையில், வினாக்கள் கேட்கப்பட்டு, நீட் தேர்வை நடத்தியே
விட்டது. நம் மாநில மாணவர்கள் நம் மாநிலத்து திட்டத்தின் தேர்வில் அதிக
மதிப்பெண்கள் பெற்றிருந்தும், மருத்துவம் சேர முடியாத நிலையை ஏற்படுத்தி,
அதனால், நம் அறிவு செல்வம் அனிதாவை பறிகொடுத்தோமே, மறக்கத்தான் இயலுமா.!மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
http://siragu.com/%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%85%E0%AE%B0%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95/
No comments:
Post a Comment