திரிபுரா மாநிலத் தேர்தலில் பா.ச.க.
வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட உடனேயே, அதாவது பா.ச.க. ஆட்சிக் கட்டிலில்
அமர்வதற்கு முன்பேயே, அவசர அசரமாக அங்கே லெனின் சிலை உடைக்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து, தமிழகத்தில் பா.ச.க. ஆட்சி அமைத்தால் பெரியார் சிலைகள்
அனைத்தும் உடைக்கப்படும் என்று அக்கட்சியின் தேசியத் தலைவரான எச்.ராஜா
அறிவித்தார். காவிகள் ஓரிடத்தில் பெரியாரின் சிலையைச் சேதப்படுத்தவும்
செய்தனர்.
ஆனால் தமிழ் நாட்டில் இதற்குக் கடுமையான
எதிர்ப்பு கிளம்பியது. திராவிட இயக்கத்தினர் மட்டும் அல்லாது அனைத்து
மக்களும் அவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தது ஒரு சிறப்பாகும். அதுவும் “நாங்கள்
கடவுள் நம்பிக்கையாளர்கள் தான். பெரியார் கடவுளை மறுப்பவர் என்பதும்
நன்றாகத் தெரியும். அந்த வகையில் பெரியாருடன் மாறுபட்டாலும், அவர்
ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு ஆற்றிய பெரும் பணியை அறிவோம். எங்கள்
வாழ்வின் முன்னேற்றத்திற்கு அவர் தான் வழிகாட்டி” என்று தெளிவான
முழக்கத்துடன் அவர்கள் குரல் கொடுத்ததானது பெரியாரின் எதிரிகளை மிரளச்
செய்து இருக்கிறது.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment