பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியிலும்
இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்திலும் எட்டயபுர அரண்மனையின் அரசவைக்
கர்நாடக இசைக் கலைஞராக இருந்தவர் திரு. சுப்பராம தீட்சிதர். இவர் எழுதிய
“சங்கீத சம்பிரதாயப் பிரதர்சினி” (Sangita Sampradaya Pradarsini/ “ஸங்கீத
ஸம்ப்ரதாய ப்ரதர்சினீ”) என்ற நூல் மிகவும் அரிய இசை நூல் எனப்
பாராட்டப்படும் ஒரு இசைக்களஞ்சியம்.
திரு. சுப்பராம தீட்சிதர் (1839-1906) இசை
மும்மூர்த்திகள் எனப்படுபவர்களில் ஒருவரான முத்துசுவாமி தீட்சிதர்
அவர்களின் இசைக்குடும்பத்தைச் சார்ந்தவர். எட்டயபுரம் மன்னரின் அரசவை
கர்நாடக இசைக் கலைஞராக தனது இறுதி நாட்களில் பணியாற்றினார் முத்துசுவாமி
தீட்சிதர். அவருக்குப் பின்னர் அவரது இளைய சகோதரர் பாலுசாமி தீட்சிதர்
அப்பொறுப்பில் இருந்தார். பாலுசாமி தீட்சிதரது மகள் அன்னபூரணிக்கும்
திருவாரூரைச் சேர்ந்த சிவராம ஐயருக்கும் 1839 இல் பாலசுப்ரமணிய சர்மா என்ற
இயற்பெயர் கொண்ட இரண்டாவது மகனாகப் பிறந்தார் சுப்பராம தீட்சிதர்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.
No comments:
Post a Comment