செம்மொழி இலக்கியங்கள் பன்னூறு
ஆண்டுகாலத்திற்கு முன்னான தமிழர்தம் பண்பாடுச் செறிவு மிக்க வாழ்வினைப்
படம் பிடித்துக்காட்டும் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. தலைவன், தலைவி
ஆகிய இருவருக்குமான இல்லறப் பாங்கினையும், தலைவனின் வீரப்பாங்கினையும்
எடுத்துரைக்கும் செம்மொழி இலக்கியங்கள், பண்பாட்டு விலகல்களையும்
சுட்டிக்காட்டாமலில்லை. குறிப்பாகத் தலைவனின் ஒழுக்கம் தலைவியைத் தாண்டி
மற்றொரு பெண்ணை நோக்கிச் செல்லும் நிலையில் அதாவது கற்பு கடந்து செல்லும்
நிலையில் ஏற்படும் பண்பாட்டு விலகல்களையும் செம்மொழி இலக்கியங்கள்
நேர்மையுடன் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில், பரத்தை என்ற அழகு, அன்பு,
ஏக்கம் கொண்ட பெண்ணின் அவல மிகு வாழ்வினையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.
சங்க காலத் தலைவன் என்பவன் வண்டு போன்ற
இயல்பினன். பல மலர்கள் தாவும் நிலையை அவன் வண்டுகளிடம் இருந்துப் பெற்றானா
அல்லது வண்டு அவனிடம் இருந்துப் பெற்றதா என்பது புரியாமல் ஒரு பரத்தை தன்னை
வெறுக்கும் தலைவியைச் சாடுகிறாள்.
மேலும் படிக்க கீழே உள்ள சுட்டியை சுட்டவும்.